தேசிய வாக்காளர் தினத்தையொட்டி நெல்லை மாவட்ட தேர்தல் அலுவலக இணையதளம் தொடக்கம்

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி நெல்லை மாவட்ட தேர்தல் அலுவலக இணையதளம் தொடக்கம்
www.tirunelveli.nic.in/deo

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி திருநெல்வேலியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலகத்துக்கான இணையதளம் தொடங்கி வைக்கப்பட்டது. இணையதள முகவரி www.tirunelveli.nic.in/deo

இந்த இணையதளத்தை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான சி.சமயமூர்த்தி தொடங்கி வைத்தார். மாவட்ட தேசிய தகவலியல் மையம் வடிவமைத்துள்ள இந்த புதிய இணையதளத்தில் மாவட்ட தேர்தல் அலுவலகம் தொடர்பான பல்வேறு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த இணையதளத்தில் வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியின் வாக்காளர் உதவி பதிவு அலுவலர் ஆகியோரின் அலுவலக முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் சட்டப் பேரவை வாரியாக கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் புதிய வாக்காளர்கள் தங்கள் பெயரை வாக்காளராக பதிவு செய்யும் முறை, வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் முறை போன்ற விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. தற்போதைய புதிய வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதையும் பொதுமக்கள் எளிதில் தெரிந்து கொள்ளவும் இதில் வசதிகள் உள்ளன.

ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிகளிலும் உள்ள மொத்த வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை, மொத்த பகுதிகளின் எண்ணிக்கை, மொத்த வாக்குச் சாவடி மையங்களின் எண்ணிக்கை, 1.1.2013-ம் தேதி தகுதி வாய்ந்த ஆண், பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை ஆகிய விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த இணையதளத்தில் மாவட்டத்திலுள்ள வயது வாரியாக வாக்காளர்களின் எண்ணிக்கை, மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை, இரு எண்ணிக்கையின் வித்தியாசங்கள் போன்ற விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆட்சியர் அலுவலகம்

இந்த மாவட்டத்திலுள்ள 2532 வாக்குச் சாவடிகளுக்கான வாக்குச் சாவடி விவரங்கள், சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி நிலை அலுவலர்களை பொதுமக்கள் எளிதில் தொடர்பு கொள்ள தேவையான தொலைபேசி எண்கள், தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், வாக்குச் சாவடி நிலை அலுவலர், வாக்குச் சாவடி முகவர்கள் போன்ற தேர்தல் சம்பந்தப்பட்ட அலுவலர்களின் Buy Doxycycline தேர்தல் சம்பந்தமான அனைத்து பணிகளின் விவரங்கள் ஆகியன தொகுக்கப் பட்டுள்ளன.

தேர்தல் சம்பந்தமாக பல்வேறு படிவங்களான புதிய வாக்காளர்களாக பதிவு செய்ய படிவம் 6, பதிவு செய்யப்பட்டுள்ள விவரங்களை திருத்தம் செய்ய படிவம் 8, வாக்காளர் அடையாள அட்டையின் நகல் பெறுவதற்கு படிவம் 001சி, வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கான படிவம் 6ஏ போன்றவை வெளியிடப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் இந்தப் படிவங்களை இணையதளத்திலிருந்து எளிதில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் நடந்து முடிந்த 2011 சட்டப் பேரவைத் தேர்தல் விவரங்கள், சட்டப் பேரவைத் தொகுதி பற்றிய வரைபடங்கள், கடந்த உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தேர்தல் ஆணையம்

இணையதள தொடக்க நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:

இந்த இணையதளத்தையும் அதன் வசதியையும் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வாக்காளர்கள் தங்களுக்கு தேவையான விவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பயன்படுத்தி கொள்ள வேண்டும். மாவட்ட தேர்தல் சம்பந்தமாகவும் மற்றும் புதிய இணையதள சேவை தொடர்பாகவும் தங்கள் கருத்துகளை தெரியப்படுத்தலாம் என்றார் ஆட்சியர். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் உமா மகேஸ்வரி, மாவட்ட தகவலியல் அலுவலர் தேவராஜன், உதவி அலுவலர் ஆறுமுகநயினார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொகுப்பு,
க.கா.செ,
கடையநல்லூர்.

Add Comment