பெட்ரோலிய கழிவு மெழுகு பூசி ஆப்பிள் விற்பனை : பழக்கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் ரெய்டு

நெல்லையில் பெட்ரோலிய கழிவு மெழுகு பூசி விற்பனை செய்யப்பட்ட ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 75 கிலோ ஆப்பிள் பழங்களை பறிமுதல் செய்தனர். மாநகராட்சிப்பகுதி பழக்கடைகளில் பெட்ரோலிய கழிவு மெழுகு பூசி ஆப்பிள் விற்பனை செய்யப்படுவதாக கலெக்டர் ஜெயராமன் மற்றும் கமிஷனர் சுப்பையனுக்கு புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் மாநகராட்சி கமிஷனர் உத்தரவின் பேரில் உணவு ஆய்வாளர் ஏ.ஆர்.சங்கரலிங்கம், சுகாதார ஆய்வாளர்கள் சாகுல்ஹமீது, முருகன், பாலசுப்பிரமணியன், பெருமாள் அடங்கிய குழுவினர் பாளை., மார்க்கெட், ஐகிரவுண்டு, உழவர்சந்தை பகுதிகளில் உள்ள பழக்கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். பெட்ரோலிய கழிவு மெழுகு பூசப்பட்ட ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 75 கிலோ ஆப்பிள் பறிமுதல் செய்யப்பட்டு பொதுமக்கள் முன்னிலையில் கிருமிநாசினி தெளித்து அழிக்கப்பட்டன. பெட்ரோலிய buy Ampicillin online கழிவு மெழுகு பூசிய ஆப்பிள்கள் சாப்பிடுவதால் புற்றுநோய் வருவதற்கு காரணமாக அமைகிறது.

Add Comment