நெல்லையில் பிளாஸ்டிக் பைகள், கப்களுக்கு தடை : கேரிபேக் பயன்படுத்தியவருக்கு ரூ.100 அபராதம்

நெல்லை மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த, விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. பாளை., யில் பிளாஸ்டிக் கேரி பேக் மூலம் பால் விற்பனை செய்த வியாபாரிக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது. பிளாஸ்டிக் பைகள், கவர்கள், கப்புகள் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. ஓடை, கால்வாய்களில் அடைப்பு ஏற்படுவதாகவும், மழைக்காலங்களில் பிளாஸ்டிக் பைகளால் ஏற்பட்டுள்ள அடைப்பால் மழைநீர் தேங்குவதாகவும் தெரியவந்தது. நிலத்தடி நீரும் மாசுபட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் கப்கள், பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்பட்டு மாவட்டத்தில் முழுமையான தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. நெல்லையில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் ஒருமுறை தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் குவளைகளை ஒருமுறை பயன்படுத்துவோருக்கு ரூ.100 அபராதம் விதிக்கவும், பிளாஸ்டிக் பைகள் மற்றும் ஒருமுறை பயன்படுத்தி ரூ.500ம், பிளாஸ்டிக் பைகள் மற்றும் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி ஏறியப்படும் பிளாஸ்டிக் குவளைகள் உற்பத்தி செய்பவர்களுக்கு ரூ.ஆயிரமும் அபராதம் விதிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் உணவு ஆய்வாளர் ஏ.ஆர்.சங்கரலிங்கம், சுகாதார ஆய்வாளர்கள் சாகுல்ஹமீது, முருகன், பாலசுப்பிரமணியன், பெருமாள் அடங்கிய குழுவினர் பாளை., பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். Lasix No Prescription அப்போது பாளை., உழவர்சந்தை முன்பு தனியார் பாலகத்தில் கேன்களில் பாலை கொண்டு வந்து பிளாஸ்டிக் கேரி பேக்குகளில் ஒருவர் விற்பனை செய்து கொண்டிருந்தார். அவருக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது. கேரிபேக் பயன்படுத்தக் கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பயன்படுத்திய கேரிபேக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

நாளை முதல் தொடர் ரெய்டு : நெல்லை மாநகராட்சி பகுதிகளில் நாளை ஜன.1ம் தேதி முதல் பிளாஸ்டிக் கேரிபேக், பிளாஸ்டிக் கப்களை பயன்படுத்துவதை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தி அவற்றை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Add Comment