அமெரிக்காவிலேயே மிகவும் பிரபலமான கவர்னராக இந்தியர் ஜின்டால் தேர்வு

அமெரிக்காவிலேயே மிகவும் பிரபலமான ஆளுநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான பாபி ஜின்டால் விளங்குவதாக கருத்துக் கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

லூசியானா மாகாண ஆளுநராக இருக்கிறார் பாபி ஜின்டால். பப்ளிக் பாலிசி போலிங் என்ற அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பில் அமெரிக்க ஆளுநர்களிலேயே மிகவும் பிரபலமானவராக திகழ்வது பாபிதான் என்று தெரிய வந்துள்ளது.

அவருக்கு 58 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. அதேசமயம், அவரது வேலையில் திருப்தி இல்லை என்று 34 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனராம்.

குடியரசுக் கட்சியைச்சேர்ந்தவர் பாபி ஜின்டால். அடுத்த Buy Levitra Online No Prescription ஆண்டு மீண்டும் ஆளுநர் தேர்தலில் போட்டியிடவுள்ளார் பாபி. கடந்த அதிபர் தேர்தலின்போது துணை அதிபர் பதவிக்கு பாபி நிறுத்தப்படலாம் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது நினைவிருக்கலாம்.

அமெரிக்க ஆளுநர்களிலேயே செல்வாக்கு குறைந்தவர் யார் தெரியுமா, ஒரு காலத்தில் உலகின் பாப்புலர் நடிகராக இருந்தவரான அர்னால்ட் ஸ்வார்ஸனீகர்தான். இவருக்கு வெறும் 25 சதவீத வாக்குகள்தான் கிடைத்துள்ளன.

Add Comment