சவூதி அரேபியா ரியாத் நகரில் காயிதே மில்லத் பேரவை உறுப்பினர் சேர்ப்பு முகாம்

சவூதி அரேபியா ரியாத் நகரில் காயிதே மில்லத் பேரவை உறுப்பினர் சேர்ப்பு Buy Doxycycline Online No Prescription முகாம்

சவூதி அரேபியாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அமைப்பான காயிதெ மில்லத் பேரவை சிறந்த முறையில் செயல்பட்டு வருவது நாம் அறிந்ததே. பேரவையை விரிவுபடுத்தவும் மேலும் சிறப்பான சமுதாய சேவை செய்வதற்காகவும் தற்போது காயிதெ மில்லத் பேரவைக்கு உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது. சமுதாய பணி செய்ய விரும்பும் சகோதரர்கள் பேரவையில் உறுப்பினராகி பணியாற்றிட அன்போடு அழைக்கின்றோம். உறுப்பினராவதற்கான கட்டணம் 5 ரியால்கள் மட்டுமே. மேலும் விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

qmf image

உறுப்பினராக விரும்பும் சவூதி வாழ் சகோதரர்கள் திரு க.கா. செய்யது இபுராகிம் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞரணி மாநில அமைப்புக்குழு உறுப்பினர்) அவர்களை 00966550783748 என்ற தொலைபேசியிலோ அல்லது நேரிலோ தொடர்பு கொள்ளலாம். அல்லது எஸ்.எம்.எஸ். வாயிலாக பதிவு செய்ய விரும்பும் நபர்கள் தங்களின் பெயர், தகப்பனார் பெயர், வயது, வாக்காளர் அடையாள அட்டை எண் (இருந்தால்), இந்தியாவில் முகவரி, சவூதியில் முகவரி மற்றும் இமெயில் போன்றவற்றை அனுப்பி பதிவு செய்து கொள்ளலாம். சவூதி அரேபியாவில் உள்ள எந்த மாநிலத்திலுள்ளவர்களும் (ரியாத், ஜித்தா, தமாம், மக்கா, மதீனா, அல் கஸிம், நஜ்ரான், ஜிஸான், அபஹா, தாயுப், தபூக் உள்ளிட்ட மாநிலங்கள்) இதில் உறுப்பினராகி சமுதாயப் பணி செய்யலாம். வருகின்ற வெள்ளிக் கிழமை ரியாத் நகர் மலாஸ் மாவட்டத்தில் பேரவை உறுப்பினர் சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. தொடர்ந்து பேரவையின் செயல்திட்டங்கள் மற்றும் நடைமுறைகள் வகுக்கப்பட்டு தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் அவர்களின் ஒப்புதலுக்கும் மற்றும் காயிதே மில்லத் பேரவையின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் திரு. அப்துல் ரகுமான் எம்.பி. மற்றும் தமிழ்நாடு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் திரு.கே.ஏ.எம். முகம்மது அபூபக்கர் அவர்களின் ஒப்புதலுக்கும் அனுப்பப்படும். அனுமதி கிடைக்கப்பெற்றதும் முறையாக செயல்திட்டங்கள் தொடங்கப்படும்.

தகவல்,
க.கா.செ,
ரியாத்

Add Comment