ஆந்திராவை முன்மாதிரியாக கொள்வாரா ஜெயலலிதா..?

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கொட்டித் தீர்த்து ஓய்ந்துள்ளது. இந்த பெருமழையின் காரணமாக உயிரிழப்புகள்- பொருள் இழப்புகளுக்கு உள்ளாகி நிற்கின்றனர் தமிழக மக்கள். அதிலும் குறிப்பாக வட்டிக்கடன் வாங்கி வயலில் போட்டு, அது வாய்க்காலில் போனதால் வாடி நிற்கின்றனர் விவசாயிகள். தமிழக அரசு உடனடியாக மழைக்கால நிவாரனங்களுக்கென 600 கோடி ரூபாய்களை ஒதுக்கியுள்ளது.

மேலும் வெள்ளச் சோதனைகளை பார்வையிட வந்த மத்தியக்குழு, 1 ,832 கோடியை தமிழகத்திற்கு மத்திய அரசு உடனடியாக ஒதுக்கவேண்டும் என்று கூறியுள்ளது. தமிழக அரசு ஒதுக்கியுள்ள நிதியும், மத்திய அரசு தமிழகத்திற்கு ஒதுக்கப்போகும் நிதியும் முழுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்றடைந்தால் நலமே. ஆனால் அதற்கு நேர்மாற்றமாக பலபேர் கையில் மாறும் ஐஸ்கட்டி கரைவது போல் கரைந்து, கடைசியில் சில துளிகளே மக்களுக்கு சென்றடைகிறது என்பதுதான் மக்களின் புலம்பலாக உள்ளது.

இந்த நேரத்தில் அரசின் உதவித்தொகை மக்களை சென்றடைவதில் ஆளும்கட்சிக்கு எவ்வளவு அக்கறையிருக்கிறதோ அதே அளவு ஏன் அதையும் தாண்டி எதிர்கட்சிக்கு இருக்கவேண்டும். ஏனெனில், பாதிக்கப்பட்டவர்களில் ஆளுங்கட்சிக்கு வாக்களித்தவர்கள் மட்டுமல்ல. எதிர்கட்சிக்கு வாக்களித்தவர்களும், பொதுஜனங்களும் உண்டு. எனவே வாக்களித்த மக்களுக்கும், வாக்களிக்காத மக்களுக்கும் கூட முதல்வர் கருணாநிதி தான் என்பது எந்த அளவு உண்மையோ, அதேபோல் ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் ஜெயலலிதாதான் எதிர்கட்சித் online pharmacy without prescription தலைவர்.

எனவே ஜெயலலிதா வெற்று அறிக்கையோடு நின்றுவிடக்கூடாது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் சென்றடைகிறதா என்பதை அவரும், அவரது கட்சியினரும் நேரடியாக சென்று மக்களின் கருத்தறிய வேண்டும். மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கவேண்டிய நிவாரண நிதியை உடனே வழங்கிடுமாறு தனது கட்சி எம்.பி.க்கள் மூலம் பிரதமரை வலியுறுத்த வேண்டும். மேலும் கூடுதல் நிதி பெற்று தமிழகத்திற்கு வழங்க முயற்சிக்கவேண்டும்.

ஏனெனில், அண்டை மாநிலமான ஆந்திராவில் எதிர்கட்சியை சேர்ந்த சந்திரபாபு நாயுடு, வெற்று அறிக்கையோடு நின்று விடாமல், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணம் அளிக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். நேற்று அரசியல் களம் கண்ட ஜெகன் மோகனும் கூட உண்ணாவிரதம் இருந்துள்ளார். இதெல்லாம் எதை காட்டுகிறது? உள்ளுக்குள் அரசியல் நோக்கம் இருப்பினும், மக்களுக்காக களமிறங்கினால் தான் மக்களின் மனம் இறங்கும் அதன் மூலம் அவர்களின் வாக்குகளை பெறமுடியும் என்ற அரசியல் ராஜதந்திரத்தை கையாளுகிறார்கள்.

ஜெயலலிதா ஆந்திராவை முன்மாதிரியாக கொள்வாரா? அல்லது வெற்று அறிக்கை வெற்றியை பெற்றுத்தரும் என எண்ணி இறுமாந்திருப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Add Comment