கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தட்டிபோர்டு !!

கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தட்டிபோர்டு !!
கடையநல்லூர் நகராட்சி முன்பு திருமங்கலம் – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள், பாதசாரிகளுக்கு இடையூறு தரும் விதமாக அபாயகரமான குழி நீண்ட நாட்களாகவே சரி செய்யப்படாமல் உள்ளது. இந்த குழியினால் தினந்தோறும் வாகன ஓட்டிகள் விபத்தை சந்தித்து வருகின்றனர்.மேலும் இந்த சாலையில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள்,நகராட்சி உயர் அதிகாரிகள் தினந்தோறும் சென்று வந்தாலும் இந்த அபாயகரமான குழியை சம்பந்தப்பட்ட துறையினர் கண்டுகொள்ளாத காரணத்தினால் மக்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில்

தேசிய நெடுச் சாலை துறைக்கு TNTJ எச்சரிக்கை.
மரண குழி இங்கே!நெடுச் சாலை துறை எங்கே!
சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளே என் அருகில் வாருங்கள்!
உங்களை நான் சாகடிக்க காத்துக் கொண்டு இருக்கிறேன்! என் அருகில் வாரீர்! வாரீர்!! வாரீர்!!!
இந்த ஊரின் மரண குழியான என்னை கேட்பதற்க்கு யாரும் இல்லையே! ஹி!ஹி!!ஹி!!!

என்ற வாசகங்கள் அடங்கிய தட்டிபோர்டு வைக்கப்பட்டுள்ளது.
Viagra online rel=”attachment wp-att-33851″>2 board

Add Comment