அஜ்மீர் குண்டுவெடிப்பு:கேரளாவில் பதுங்கியிருக்கும் தேடப்படும்

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் தர்காவில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் கடந்த 2007 ஆம் ஆண்டு பயங்கர குண்டுவெடிப்பை நிகழ்த்தினர்.

Buy cheap Viagra style=”text-align: justify;”>இக்குண்டுவெடிப்பில் 3 மரணமடைந்தனர். 30 பேர் கடுமையான காயமுற்றனர். இக்குண்டுவெடிப்புத் தொடர்பாக ராஜஸ்தான் மாநில ஏ.டி.எஸ் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தைச் சார்ந்தவர்களை கைதுச் செய்துவருகிறது.

இந்நிலையில் இக்குண்டுவெடிப்புடன் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதி ஒருவர் கேரள மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவருடைய பெயர் சுரேஷ் நாயர்(வயது 33).கேரள மாநிலத்தின் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுடன் சுரேஷ் நாயருக்கு தொடர்பிருப்பதற்கு ஆதாரம் கிடைத்துள்ளதாக தெரிகிறது.

ராஜஸ்தானிலிருந்து புலனாய்வுக்குழு கேரள மாநிலம் கோழிக்கோடு வருகைபுரிந்து ஆர்.எஸ்.எஸ் அலுவலகங்களில் சோதனை நடத்தவிருக்கிறது.

அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பில் தொடர்புடைய ஐந்துபேரில் நான்கு பேரும் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் என ஏற்கனவே ஏ.டி.எஸ்
தெரிவித்திருந்தது.

ஆர்.எஸ்.எஸ் ஜில்லா பிரச்சாரக் தேவேந்திர குப்தா (ஜார்கண்ட்), பிரச்சாரக் லோகேஷ் சர்மா, ஜில்லா சம்பர்க்க பிரமுக் சந்திரசேகர் லாவே, பிரச்சாரக் சந்தீப் டாங்கே(மத்திய பிரதேசம்) ஆகியோர் ஏ.டி.எஸ் சமர்ப்பித்த குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளனர்.

கேரள மாநிலம் கொயிலாண்டியைச் சார்ந்த சுரேஷ் நாயர் சிறுவயதிலேயே ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தில் உறுப்பினராகிவிட்டார். இவர் குஜராத் மாநிலத்தை மையமாக வைத்து செயல்பட்டு வருகிறார் என கருதப்படுகிறது.

இந்த ஆண்டு கொல்லம் ஆஸ்ராமம் மைதானத்தில் சி.பி.எம் கட்சியின் மேயர் துவக்கிவைத்த ஆர்.எஸ்.எஸ்ஸின் ஸாங்கிக்கில் சுரேஷ் நாயர் பங்கேற்றுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் வெடிப்பொருட்களை காரில் கொண்டுபோய் சேர்த்த 5 பேரில் சுரேஷ் நாயரும் ஒருவர் என்பதற்கு ஆதாரம் கிடைத்துள்ளது.

Add Comment