துபாயில் சமூக சேவகர் அன்வர் பாஷாவிற்கு பிரிவு உபசார விழா

துபாய் : துபாயில் சமூக சேவகர் லெப்பைக்குடிக்காடு அன்வர் பாஷாவிற்கு பிரிவு உபசார விழா குத்தாலம் ஏ. அஷ்ரஃப் அலியின் ஏற்பாட்டில் 30.12.2010 வியாழக்கிழமை மாலை ரிக்கா லேண்ட்மார்க் ஹோட்டலில் சிறப்புற நடைபெற்றது.

துவக்கமாக லெப்பைக்குடிக்காடு படேஷா பஷீர் இறைவசனங்களை ஓதினார். நிவேதிதா ஆனந்தன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார்.

கவிஞர் கிளியனூர் இஸ்மத் வரவேற்புரை நிகழ்த்தினார்.

ETA MNE Division Sr. Executive Director அன்வர் பாஷா அவர்கள் தனது தலைமையுரையில் உழைப்பினால் உயர்ந்தவர் என்ற சொல்லுக்கு அழகு சேர்ப்பவர் தனது ஊரான லெப்பைக்குடிக்காட்டைச் சேர்ந்த உங்கள் நண்பன் அன்வர் பாஷா அவர்கள். பல்வேறு சமுதாய மற்றும் தமிழ் அமைப்புகளும் அவருக்கு பாராட்டி வழங்கி கௌரவிப்பது பெருமகிழ்வினையளிக்கிறது. விரைவில் தனது ஊர் சார்பிலும் இத்தகையதொரு நிகழ்வினை நடத்த இருப்பதாகக் குறிப்பிட்டார்.

நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் குத்தாலம் ஏ. அஷ்ரஃப் அலி அவர்கள் உங்கள் நண்பன் அன்வர் பாஷா 36 ஆண்டு காலம் அமீரகத்தில் பணிபுரிந்து தாயகம் செல்கிறார். நீடித்த ஆயுளுடன் இன்னும் பல ஆண்டுகள் சமுதாயப் பணியாற்ற வாழ்த்துவதாகக் குறிப்பிட்டார்.

ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி, வானலை வளர்தமிழ் அமைப்பின் கோவிந்தராஜ், அமீரக காயிதெமில்லத் Buy cheap Levitra பேரவையின் பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, தமிழ்நாடு பண்பாட்டுக் கழகத்தின் எஸ்.எம். ஃபாரூக், அமீரக தமிழ் மன்றத்தின் ஆலோசகர் ஆசிஃப் மீரான், தமிழ் மகளிர் வட்டத்தின் மீனா வெங்கட், ஷார்ஜா தமிழ்நாடு பண்பாட்டுக் கழத்தின் கவிஞர் ராமலிங்கம், ஏகத்துவ மெய்ஞான சபையின் தலைவர் சஹாபுதீன், பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழக தலைவர் மீரா அப்துல் கத்தீம், தாய்மண் வாசகர் வட்டத்தின் செ.ரெ. பட்டணம் மணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கி நினைவுப் பரிசு அளித்து 36 ஆண்டு காலம் அமீரகத்தில் தமிழ் மக்களுக்காக சேவை புரிந்த உங்கள் நண்பன் அன்வர் பாஷாவினை பாராட்டி கௌரவித்தனர்.

ஏற்புரை நிகழ்த்திய உங்கள் நண்பன் அன்வர் பாஷா அவர்கள் தனது உரையில் தமிழ் மக்களுக்கு பல்வேறு பணிகள் ஆற்றக் காரணமாக இருந்த அனைவருக்கும் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார். தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் அமீரகத்தில் இறந்து விட்டால் அவருக்கு உறவினர் இங்கு இல்லாத பட்சத்தில் அவரது சடலத்தை நல்லடக்கம் செய்திட பலர் செய்திட்ட உதவியின் காரணமாக இத்தகைய பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதுபோல் விசா காலம் முடிந்து தாயகம் செல்ல விரும்புவோருக்கு உதவி, மருத்துவ அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு இந்திய தூதரகம் மூலம் பல்வேறு உதவிகள் பெற்றுத் தரப்பட்டன. தனக்கு இத்தகையதொரு வாழ்வில் மறக்கவியலா நிகழ்வினை செய்திட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

அஷ்ரஃப் அலி நன்றி தெரிவித்தார். இரவு உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Add Comment