கருப்புத்துணி போட்டு முகத்தை மறைத்து கைது செய்யப்பட்டவர்கள் களங்கமற்றவர்களாக விடுதலை!

306099_423839977703198_595504149_nகருப்புத்துணி போட்டு முகத்தை மறைத்து கைது செய்யப்பட்டவர்கள் களங்கமற்றவர்களாக விடுதலை! காவல்துறையின் கருப்பு ஆடுகளுக்கு என்ன தண்டண்டனை?

Feb27, கடந்த 2012 ஆகஸ்ட் 29ந்தேதி, 13 முஸ்லிம் இளைஞர்களை கறுப்புத்துணியால் முகத்தை மறைத்த வண்ணம் கடும் குற்றவாளிகளாக சித்தரித்து “கைது செய்தது” கர்நாடக காவல்துறை. படித்த பட்டதாரி மாணவர்களான இவர்களை, முக்கிய அரசியல் தலைவர்களை கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய “கூலிப்படை” என்றும், பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்புக்களுடன் தொடர்புடையவர்கள் என்றும், பக்கம்-பக்கமாக எழுதி, பத்திரிக்கைகள் பழி தீர்த்துக்கொண்டன. கைது செய்யப்பட்ட அப்பாவி இளைஞர்களை, கடந்த ஆறு மாதங்களாக ஒன்றன் பின் ஒன்றாக, 11 புலனாய்வு (புடலங்காய்) அமைப்புக்கள் விசாரித்தன.

இவர்கள் மீது எந்த குற்றத்தையும் பதிவு செய்யமுடியாத நிலையில், கோர்ட்டு உத்தரவுப்படி, நேற்று முன்தினம் (25/02) இரவு 9 மணிக்குமேல், இருவர் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை செய்யப்பட்டவர்களில் ஒருவரான “முதீவூர் ரஹ்மான் சித்தீகி” பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றில் கிரைம் ரிப்போர்டராக பணிபுரிந்து வந்தவர். மற்றொருவர் “சையத் யூசுப் நால்பந்தி” நால்பந்த் நகரத்தில் மின்சாதன தயாரிப்பு நிறுவனத்தில் பொறியாளராக இருந்தவர். விடுவிக்கப்பட்ட இருவரும் பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்து, தங்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளை விவரித்தனர்.

முதீவூர் ரஹ்மான் பேசும்போது: தான் ஒரு செய்தியாளர் என்றவகையில் தன்னைப்பற்றி ஓரளவு அறிந்திருந்த பத்திரிக்கைகள் கூட “அவதூறு பரப்பியதை” வேதனையுடன் தெரிவித்தார். மேலும், விசாரணைகளின்போது, ஒரு உளவுத்துறை உயரதிகாரி “நீங்கள் குற்றம் செய்யவில்லை என மறுக்கிறீர்கள்; பத்திரிக்கைகளில் பக்கம்-பக்கமாக உங்களை பற்றி எழுதப்பட்டு வருகிறதே” எனக்கேள்வி எழுப்பியதாகவும் தெரிவித்தார்.

யூசுப் கூறும் போது: எங்களுக்கு உடல் ரீதியாக கொடுக்கப்பட்ட துன்பங்களைவிட மன ரீதியான “டார்ச்சர்கள்” தான் அதிகம்,என்றார். தாங்கள் விடுதலை செய்யப்பட்டது மகிழ்ச்சியளித்தாலும், தங்களுடன் சேர்த்து கைது செய்யப்பட்ட எஞ்சிய 11 முஸ்லிம் இளைஞர்களும் விடுவிக்கப்பட்டால் online pharmacy no prescription தான், நிம்மதி பெறுவோம் என்றனர். அவர்கள் அனைவரும் எங்களது நண்பர்கள்; ஒரு பாவமும் செய்யாத ஆப்பாவிகள்,என்றனர். கருப்பு முகமூடிகளை கையில் வைத்துக்கொண்டு அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கவ்விப்பிடிக்க அலையும் “காவல்துறை கருப்பு ஆடுகளை” தண்டிப்பது யார்? யார்?? யார்???

Add Comment