17 இந்தியர்களுக்கு மரணத்தண்டனை – ஷார்ஜா நீதிமன்றம் நிறுத்திவைத்தது

பாகிஸ்தான் நாட்டவரைக் கொலைச்செய்த வழக்கில் கள்ளச்சாராய வியாபாரிகளாக கருதப்படும் 17 இந்தியர்களின் மரணத் தண்டனையை ஐக்கிய அரபு அமீரக மாநிலமான ஷார்ஜாவின் ஷரீஅத் நீதிமன்றம் நிறுத்திவைத்தது.

கொல்லப்பட்டவரின் குடும்பத்தினர் நஷ்ட ஈட்டை பெற்றுக்கொள்ள சம்மதித்ததைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்த 16 நபர்களுக்கும், ஹரியானா மாநிலத்தைச் சார்ந்த ஒருவருக்கும் ஷார்ஜாவின் ஷரீஅத் நீதிமன்றம் கடந்த 2010 மார்ச் மாதம் மரணத் தண்டனையை விதித்தது.

கடந்த 2010 ஜனவரி மாதத்தில் ஷார்ஜாவில் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஏற்பட்ட மோதலில் 17 இந்தியர்கள் பாகிஸ்தான் நாட்டவரைக் கொலைச் செய்ததாக வழக்குத் தொடரப்பட்டதைத் தொடர்ந்துதான் மரணத்தண்டனை விதிக்கப்பட்டது.

கொலை நடந்த இடம் ஷார்ஜா மாநிலத்தின் அல் ஸஜாஅ பகுதியாகும். துவக்கத்தில் மரணமடைந்த பாகிஸ்தானியரின் குடும்பத்தினர் கொலைக்கு பதிலாக எவ்வித நஷ்ட ஈட்டையும் பெறமாட்டோம் எனவும், குற்றவாளிகளுக்கு மரணத் தண்டனையை நிறைவேற்ற வேண்டுமெனவும் கூறியிருந்தனர்.

தற்பொழுது அவர்கள் நஷ்ட ஈட்டை பெற ஒப்புக்கொண்டதால் மரணத்தண்டனை Buy Cialis Online No Prescription நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. நஷ்ட ஈடு வழங்கப்படாத சூழலில் மரணத்தண்டனை நிறைவேற்றப்படும்.

Add Comment