பான் கார்டு வடிவில் வாக்காளர் அடையாள அட்டை…

தற்பொழுது உள்ள வாக்காளர் அடையாள அட்டையின் தரத்தை மேம்படுத்த அதைபுதிய வடிவத்தில் மாற்ற தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. இந்த புதிய அடையாள அட்டைகள் பான் கார்டு வடிவத்திலும், வாக்காளரின் கலர் போட்டோவுடன் வர உள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. இதில் எவ்வித மாற்றமோ அல்லது முறைகேடாக திருத்தமோ செய்ய முடியாது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். டிசம்பரில் நடைபெற்ற அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில், வாக்காளர் அடையாள அட்டையில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக ஜனவரியில் தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்ட பின்னரே இம்முடிவு எடுக்கப்பட்டதாக உத்திர பிரதேச தலைமை தேர்தல் அதிகாரி உமேஷ் சின்ஹா தெரிவித்துள்ளார். அசாமில் ஏற்கனவே இந்த புதிய வடிவத்திலான வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு விட்டதாகவும், இது சட்ட விரோதமாக மாற்றம் செய்தல் மற்றும் ஆள்மாறாட்டத்தை தடுக்க உதவுகிறது எனவும் உமேஷ் சின்ஹா தெரிவித்துள்ளார். இந்த புதிய கார்டுகள் 8.6 செ.மீ., உயரமும், 5.4 செ.மீ., அகலமும் தொண்டதாக இருக்கப்படும்.

பிவிசி அட்டையில் அச்சிடப்பட்ட இந்த அட்டை லேமினேஷன் செய்ததாக இருக்கும். இதுவரை லேசான காகிதங்களே வாக்காளர் அடையாள அட்டை தயாரிக்க பயன்படுத்தப்பட்டு வந்தது என சின்ஹா தெரிவித்துள்ளார். மேலும் இந்த புதிய அடையாள அட்டையில் போட்டோக்கள் துல்லியமான ஃபோக்கஸ் கொண்டதாகவும், உயர்தரமாகவும், கிரீஸ் மற்றும் இன்க் குறிகள் இல்லாமலும், இயற்கையான நிறத்தை Buy cheap Ampicillin கொண்டதாகவும், தெளிவான வடிவத்தை கொண்டதாகவும் இருக்கும் எனவும் உமேஷ் சின்ஹா தெரிவித்துள்ளார். புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் பெறுவதற்கான கட்டணம் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Add Comment