சவூதிக்கு வேலைக்கு சென்றவர் எங்கே? விடை தெரியாமல் தவிக்கும் குடும்பம்

04-muthuraj-300சவூதிக்கு வேலைக்கு சென்ற முத்துராஜ் மாசிலாமணி என்ன ஆனார் என்று கண்டுபிடிக்குமாறு அவரது குடும்பத்தார் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ஆசிஷ் குமாரிடம் மனு கொடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் காரசேரி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துராஜ் மாசிலாமணி. அவரது மனைவியின் பெயர் சந்திரா. அவர்களுக்கு தர்ம துரை(15) என்ற மகனும், மான்சி(11) என்ற மகளும் உள்ளனர். முத்துராஜ் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ரியாத்தில் முஹம்மத் பின் காலித் பின் முஹம்மத் அல் சபீ( MOHAMMED BIN KHALID BIN MOHAMMED AL SABIEE) என்பவரது வீட்டில் கார் ஓட்டுனராக பணி புரிந்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் 9ம் தேதியில் இருந்து அவர் தன்னுடைய குடும்பத்தினருடன் எந்த வித தொடர்பு இல்லாமல் இருந்தார்.

உறவினர்கள் எல்லாவிதமான முயற்சிகள் செய்தும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. பத்து நாட்களுக்குப் பிறகு சவூதி அரேபியாவில் இருந்து அவர்கள் குடும்பத்திற்கு ஒரு தகவல் வந்தது. அதில், முத்துராஜ் கார் விபத்தில் இறந்து விட்டார் என்றும், அவரது உடல் அல் கொயா பொது மருத்துவமனையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவரது முதலாளி குடும்பத்தினர் அனைவரும் முத்துராஜ் மாசிலாமணி கார் விபத்தில் இறந்துவிட்டதாக கூறுகின்றனர்.

மேலும் அவரது உடலை பார்த்து முத்துராஜ் தான் என்று உறுதியாக யாரும் கூறவில்லை என்று சில தினங்களுக்கு முன் ஒரு தகவல் வந்துள்ளது அதில், முத்துராஜ் மாசிலாமணி இறக்கவில்லை என்றும் அவர் கோமா நிலையில் மருத்துவமையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Buy Ampicillin Online No Prescription இது குறித்து முத்துராஜ் குடும்பத்தினர் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ஆசிஷ் குமாரிடம் கடந்த திங்கட்கிழமை அன்று மனு ஒன்றை அளித்தனர்.

அம்மனுவில், சவூதி அரேபியாவில் எங்களுக்கு தெரிந்தவர் யாரும் இல்லாததால் முத்துராஜ் குறித்து எந்தவித தகவலும் பெற இயலாமல் இருக்கிறோம். இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து முத்துராஜ் குறித்த உண்மை தகவல்களை கண்டறிந்து எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். உடல் நலமின்றி மருத்துவமனையில் இருந்தால் அவரை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க முயற்சிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Add Comment