இங்கிலாந்து-ஆஸி., பலப்பரீட்சை: இன்று ஆஷஸ் 5வது டெஸ்ட் துவக்கம்

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 5வது போட்டி சிட்னியில் இன்று துவங்குகிறது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி வரலாற்று சிறப்புமிக்க 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதில், மெல்போர்னில் நடந்த நான்காவது டெஸ்டில் வென்ற இங்கிலாந்து அணி 2-1 Buy Amoxil என்ற முன்னிலையுடன், ஆஷஸ் கோப்பையை வென்றது. இன்று ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட், சிட்னியில் துவங்குகிறது. இப்போட்டியில் தோல்வி அடைந்தாலும் கூட, கடந்த முறை தொடரை வென்றதன் அடிப்படையில் ஆஷஸ் கோப்பையை இங்கிலாந்து தக்கவைத்துக் கொள்ளும்.
இரண்டு புதுமுகம்:
சொந்த மண்ணில் 24 ஆண்டுகளுக்கு பின் ஆஷஸ் தொடரை இழந்த சோகத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய அணி, இம்முறை எழுச்சி காண வேண்டிய கட்டாயத்தில் <உள்ளது. காயம் காரணமாக பாண்டிங் விலகிய நிலையில், கேப்டன் பொறுப்பை மைக்கேல் கிளார்க் ஏற்கிறார். பாகிஸ்தானில் பிறந்த உஸ்மான் கவாஜா அறிமுக வீரராக களமிறங்க உள்ளார். சுழற்பந்துவீச்சாளர் மைக்கேல் பியரும் வாய்ப்பு பெற்றுள்ளார்.
கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறுகையில், “”இப்போட்டியில் வெற்றி பெற்றாலும், கோப்பையை கைப்பற்ற முடியாது. இருப்பினும் தொடரை “டிரா’ செய்த ஆறுதல் கிடைக்கும். தோல்வியின் பிடியிலிருந்து எழுச்சி பெறுவோம்,” என்றார்.
மாற்றம் இருக்காது:
இங்கிலாந்து அணியில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை. கேப்டன் ஸ்டிராஸ், கெவின் பீட்டர்சன், அலெஸ்டர் குக், இயான் பெல், கோலிங்வுட், மட் பிரையர் உள்ளிட்ட முன்னணி பேட்ஸ்மேன்கள் நல்ல “பார்மில்’ இருப்பதால் வலுவான இலக்கை நிர்ணயிக்கலாம். வேகப்பந்துவீச்சில் ஆண்டர்சன், ஸ்டீவன் பின், கிறிஸ் டிரம்லட் உள்ளிட்டோர் நம்பிக்கை அளித்து வருகின்றனர். சுழலில் சுவான் கைகொடுக்கும் பட்சத்தில் ஆஸ்திரேலியாவுக்கு சிக்கல் அதிகமாகிவிடும்.
கேப்டன் ஸ்டிராஸ் கூறுகையில், “” சிட்னி டெஸ்டில் வெற்றி பெற்று ஆஷஸ் கோப்பையை தக்கவைத்துக்கொள்ள விரும்புகிறோம் வீரர்கள் நல்ல “பார்மில்’ இருப்பதால் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது,” என்றார்.

Add Comment