காலிஸ், ஆம்லா அரைசதம்: மீண்டது தென் ஆப்ரிக்கா: இந்திய பவுலர்கள் ஏமாற்றம்

கேப்டவுன் டெஸ்டில் Lasix online ஆம்லா, காலிஸ் அரைசதம் அடித்து கைகொடுக்க, தென் ஆப்ரிக்க அணி சரிவிலிருந்து மீண்டது. பந்துவீச்சில் இந்திய பவுலர்கள் ஏமாற்றம் அளித்தனர்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற, தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.
மீண்டும் காம்பிர்:
வெற்றியாளரை முடிவு செய்யும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று, கேப் டவுன், நியூலாண்ட்ஸ் மைதானத்தில் துவங்கியது. இந்திய அணியில் இருந்து முரளி விஜய் நீக்கப்பட்டு, காம்பிர் இடம் பெற்றார். தென் ஆப்ரிக்க அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பின், “டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் தோனி, “பீல்டிங்’ தேர்வு செய்தார்.
ஜாகிர் அபாரம்:
தென் ஆப்ரிக்க அணிக்கு துவக்கத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. ஜாகிர் கான் வேகத்தில் மீண்டும் ஒரு முறை கேப்டன் ஸ்மித் (6) வீழ்ந்தார். இவர், ஜாகிர் பந்தில் அவுட்டாவது இது 11வது முறை.
மழை குறுக்கீடு:
தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 21 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. உணவு இடைவேளைக்குப் பின், தாமதமாக போட்டி துவங்கியது. இம்முறை இஷாந்த் சர்மாவின் பந்தில் பீட்டர்சன் (21) வெளியேறினார். பின் காலிஸ், ஆம்லாவுடன் இணைந்தார். 61 ரன்களுக்கு 2 விக்கெட் என்ற நிலையில், போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டி, மறுபடியும் நிறுத்தப்பட்டது.
ஆம்லா அதிரடி:
மீண்டும் ஆட்டம் துவங்கியதும், அதிரடியாக ஆடிய ஆம்லா, ஜாகிரின் ஓவரில் 3 பவுண்டரிகள் விளாசினார். அடுத்து ஸ்ரீசாந்த் பந்து வீச்சில் “சூப்பர்’ சிக்சர் அடித்த இவர், தனது 19வது அரைசதம் அடித்தார். ஸ்ரீசாந்தின் 2 ஓவரில் 23 ரன்கள் எடுத்து மிரட்டிய ஆம்லா (59), கடைசியில் இவரிடமே சிக்கினார்.
காலிஸ் அரைசதம்:
பின் காலிஸ், டிவிலியர்ஸ் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய காலிஸ், அரைசதம் அடித்தார். டிவிலியர்ஸ் (26), ஸ்ரீசாந்த் வேகத்தில் அவுட்டானார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில், தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்து இருந்தது. காலிஸ் (81), பிரின்ஸ் (28) அவுட்டாகாமல் இருந்தனர்.
இந்தியா சார்பில் ஸ்ரீசாந்த் 2, ஜாகிர் கான், இஷாந்த் சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

Add Comment