மத அவமதிப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதற்கு பாகிஸ்தானில் கடும் எதிர்ப்பு

பாகிஸ்தானில் தற்பொழுது அமுலிலிருக்கும் மத அவமதிப்பு Buy Cialis சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதற்கு அந்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், லாகூர், பெஷாவர், குவட்டா, கராச்சி ஆகிய இடங்களில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றன. நபிகளாரை அவமதிப்பு உள்பட மத அவமதிப்புச் செயல்களுக்கு மரணத்தண்டனை விதிப்பதுதான் பாகிஸ்தானின் தற்போதைய சட்டம்.

ஆஸியா பீவி என்ற கிறிஸ்தவ பெண்மணி நபி(ஸல்…) அவர்களை அவமதித்தன் பேரில் கடந்த நவம்பர் மாதம் மரணத்தண்டனை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இச்செய்தி ஊடகங்களில் இடம்பிடித்தது. ஐந்து குழந்தைகளின் தாயாரான ஆஸியாவை
விடுதலைச் செய்யவேண்டும் என போப் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஆஸியாவின் மேல்முறையீட்டில் தீர்மானம் எடுக்கப்படவிருக்கிறது. தற்போதைய சட்டத்திற்கு எதிராக சில மனித உரிமை அமைப்புகளும் களமிறங்கியுள்ளன. கராச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போலீசார் கண்ணீர் புகையை பிரயோகித்தனர்.

நபிகளாரின் பரிசுத்தத்தை பாதுகாக்க நாங்கள் உயிரைக் கொடுக்கவும் தயார் என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் முழங்கினர். சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் எண்ணம் இல்லை என செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் நேற்று முன்தினம் தெரிவித்தபோதிலும் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

ஏராளமான முஸ்லிம் அமைப்புகள் முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளன. சட்டத்தில் ஏதேனும் மாற்றத்தைக் கொண்டுவந்தால் ஒத்துழையாமை இயக்கத்தை துவக்குவோம் என சன்னி இத்திஹாத் கவுன்சில் சேர்மன் ஷஹப்ஸாதா ஃபஸல் கரீம் தெரிவித்தார்.

முழு அடைப்பைத் தொடர்ந்து முக்கிய நகரங்களில் மக்கள் வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மத அவமதிப்பின் பெயரால் பாகிஸ்தானில் இதுவரை எவருக்கும் மரணத்தண்டனை விதிக்கப்படவில்லை. அவ்வாறு தண்டனை வழங்கப்பட்டால் கூட மேல் நீதிமன்றங்களில் தண்டனைக் குறைக்கப்பட்டுள்ளது.

Add Comment