ஸ்மித்துக்கு ஸ்ரீசாந்த் பதிலடி

தென் ஆப்ரிக்க கேப்டன் ஸ்மித்துக்கும், எனக்கும் தனிப்பட்ட முறையில் எந்த விரோதமும் இல்லை. என்னைப் பொறுத்தவரையில் நான் சிறப்பான பவுலர் தான்,” என, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், பதிலடி கொடுத்துள்ளார்.
இந்திய அணியின் சர்ச்சைக்குரிய பவுலர் ஸ்ரீசாந்த். களத்தில் அதிகமான ஆக்ரோஷத்துடன் செயல்படும் இவருக்கும், ஸ்மித்துக்கும் இடையே டர்பன் டெஸ்டில் மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து ஸ்மித் கூறுகையில்,”” ஸ்ரீசாந்த் தனது குடும்பத்தை பற்றி தனிப்பட்ட முறையில் திட்டினார். வரம்பு மீறி செயல்படும் அவர் சிறந்த பவுலர் அல்ல,” என தெரிவித்து இருந்தார்.
ஸ்ரீசாந்த் குறித்து தென் ஆப்ரிக்க அணி அல்லது அம்பயர்கள் புகார் எதுவும் தராத நிலையில், இந்திய அணி கேப்டன் தோனி,”” ஸ்ரீசாந்த்தை கட்டுப்படுத்துவது கடினம் தான். இருந்தாலும், போட்டி விதிமுறைகளை சரியாக கடைப்பிடிக்க வேண்டும்,” என, எச்சரித்து இருந்தார்.
தற்போது கேப் டவுன் டெஸ்டின் முதல் இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்திய ஸ்ரீசாந்த், ஸ்மித் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியது:
கிரிக்கெட் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று வரும் நான், முடிந்தளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பேன். அவ்வளவு தான். எனக்கும் ஸ்மித்துக்கும் இடையில், தனிப்பட்ட முறையில் எந்த விரோதமும் இல்லை. இந்த தொடரில் நான் சற்று உறக்கத்தில் இருந்திருந்தேன். Buy Levitra நான் சிறப்பான பவுலர் இல்லை என்று தெரிவித்து, என்னை உறக்கத்தில் இருந்து எழுப்பி விட்ட ஸ்மித்துக்கு நன்றி.
தவிர, நேற்று என்ன நடந்தது, நாளை என்ன நடக்கும் என்று எப்போதும் பார்ப்பதில்லை. தற்போது என்ன நடக்கிறது, என்று மட்டும் தான் பார்ப்பேன். டர்பன் போட்டியில் ஸ்மித்தை அவுட்டாக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். இதை சரியாக செய்த நான், சிறப்பான பவுலர் தான் என்று நினைக்கிறேன்.
இவ்வாறு ஸ்ரீசாந்த் தெரிவித்தார்.

Add Comment