ஸ்ரீசாந்த், காம்பிர் அபாரம்: சதமடித்து கைகொடுத்தார் காலிஸ்

கேப்டவுன் டெஸ்டில் மிரட்டலான பந்து வீச்சை வெளிப்படுத்திய, இந்திய வீரர் ஸ்ரீசாந்த், 5 விக்கெட் வீழ்த்தினார். பேட்டிங்கில் அசத்திய காம்பிர் அரைசதம் கடந்தார். தென் ஆப்ரிக்க அணிக்கு காலிஸ் சதம் அடித்து கைகொடுத்தார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் இரண்டு போட்டிகளில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற, தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. வெற்றியாளரை முடிவு செய்யும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடக்கிறது.
முதல்நாள் ஆட்டநேர முடிவில், தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 232 ரன்கள் எடுத்திருந்தது. காலிஸ் (81), பிரின்ஸ் (28) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஸ்ரீசாந்த் மிரட்டல்:
நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது. துவக்கத்திலேயே தோனி, ஹர்பஜனின் சுழற்பந்து வீச்சை கையில் எடுத்தார். இதில் பிரின்ஸ், 2 பவுண்டரி விளாசினார். ஜாகிர் கான், இஷாந்த் சர்மாவினாலும், இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. பின் வந்த ஸ்ரீசாந்த், முதல் ஓவரின் 5வது பந்தில் பிரின்சை (47) போல்டாக்கினார். அடுத்த பந்தில் அனுபவ பவுச்சரை “டக்’ அவுட்டாக்கினார். இவரது “ஹாட்ரிக்’ வாய்ப்பை, காலிஸ் வீணடித்தார். ஸ்டைனும் ஜாகிர் கான் பந்தில் “டக்’ அவுட்டானார்.
காலிஸ் சதம்:
தொடர்ந்து விக்கெட் சரிந்த போதும், உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் காலிஸ். ஸ்ரீசாந்த் ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரி அடித்த காலிஸ், 39வது சதம் அடித்தார். வேகத்தில் தொடர்ந்து மிரட்டிய ஸ்ரீசாந்த், Cialis No Prescription மார்கலையும் (8) திருப்பி அனுப்பினார். ஹாரிஸ் (7) நிலைக்கவில்லை. மறு முனையில் காலிஸ், சர்வதேச டெஸ்ட் அரங்கில் 12 வது முறையாக 150 ரன்களை கடந்தார். இவர் 19 பவுண்டரி உட்பட 161 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 362 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் ஸ்ரீசாந்த் 5, ஜாகிர் கான் 3, இஷாந்த் சர்மா 2 விக்கெட் வீழ்த்தினர்.
சேவக் “அவுட்’:
பின் முதல் இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு சேவக், காம்பிர் ஜோடி துவக்கம் கொடுத்தது. மார்கலின் ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்து அதிரடியாக கணக்கை துவக்கினார் சேவக். ஸ்டைன் பந்திலும் பவுண்டரி விளாசிய சேவக் (13), அடுத்த பந்தில் சிக்கினார். இத்தொடர் முழுவதிலும் தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பி வரும் டிராவிட், இம்முறை 5 ரன்னுடன் ரன் அவுட்டாகி மறுபடியும் ஏமாற்றம் தந்தார்.
காம்பிர் அபாரம்:
காம்பிருடன் சச்சின் ஜோடி சேர்ந்தார். இவர்கள் தென் ஆப்ரிக்க வீரர்களின் பந்து வீச்சை கவனமாக எதிர்கொண்டனர். காம்பிர் அவ்வப்போது பவுண்டரிகள் அடிக்க, சச்சின் மார்கலில் ஓவரில் 2 பவுண்டரிகள் விரட்டினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய காம்பிர், சர்வதேச அரங்கில் 15வது அரைசதம் கடந்தார்.
இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்திருந்தது. காம்பிர் 65, சச்சின் 49 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர்.
இன்றைய மூன்றாவது நாள் ஆட்டத்தில், பேட்ஸ்மேன்கள் பொறுப்பாக விளையாடி கைகொடுக்கும் பட்சத்தில், இந்திய அணி முதல் இன்னிங்சில் முன்னிலை பெறலாம்.
ஸ்கோர் போர்டு
முதல் இன்னிங்ஸ்
தென் ஆப்ரிக்கா
பீட்டர்சன்(கே)தோனி(ப)இஷாந்த் 21(47)
ஸ்மித்-எல்.பி.டபிள்யு.,(ப)ஜாகிர் 6(12)
ஆம்லா(கே)புஜாரா(ப)ஸ்ரீசாந்த் 59(80)
காலிஸ்(கே)தோனி(ப)ஜாகிர் 161(291)
டிவிலியர்ஸ்(கே)தோனி(ப)ஸ்ரீசாந்த் 26(72)
பிரின்ஸ்(ப)ஸ்ரீசாந்த் 47(100)
பவுச்சர்(கே)தோனி(ப)ஸ்ரீசாந்த் 0(1)
ஸ்டைன்(கே)புஜாரா(ப)ஜாகிர் 0(5)
மார்கல்(கே)தோனி(ப)ஸ்ரீசாந்த் 8(11)
ஹாரிஸ்(கே)புஜாரா(ப)இஷாந்த் 7(41)
டிசோட்சபே-அவுட் இல்லை- 8(28)
உதிரிகள் 19
மொத்தம் ( 112.5 ஓவரில் 4 விக்.,) 362
விக்கெட் வீழ்ச்சி: 1-17(ஸ்மித்), 2-34(பீட்டர்சன்), 3-106(ஆம்லா), 4-164(டிவிலியர்ஸ்), 5-262(பிரின்ஸ்), 6-262(பவுச்சர்), 7-272(ஸ்டைன்), 8-283(மார்கல்), 9-310(ஹாரிஸ்), 10-362(காலிஸ்).
பந்து வீச்சு: ஜாகிர் கான் 29.5-6-89-3, ஸ்ரீசாந்த் 29-0-114-5, இஷாந்த் சர்மா 27-6-77-2, ஹர்பஜன் 27-3-75-0.
இந்தியா
காம்பிர்-அவுட் இல்லை- 65(159)
சேவக்(கே)ஸ்மித்(ப)ஸ்டைன் 13(20)
டிராவிட்–ரன் அவுட்(டிவிலியர்ஸ்) 5(16)
சச்சின்-அவுட் இல்லை- 49(106)
உதிரிகள் 10
மொத்தம் (50 ஓவரில் 2 விக்.,) 142
விக்கெட் வீழ்ச்சி: 1-19(சேவக்), 2-28(டிராவிட்).
பந்து வீச்சு: ஸ்டைன் 13-4-31-1, மார்கல் 14-3-46-0, டிசோட்சபே 12-3-28-0, ஹாரிஸ் 11-2-29-0.
பாண்டிங் சாதனை சமன்
சர்வதேச டெஸ்ட் அரங்கில் அதிக சதம் அடித்தவர்கள் வரிசையில், இந்தியாவின் சச்சின் (50 சதம்) முதலிடத்தில் உள்ளார். தற்போது, தென் ஆப்ரிக்காவின் காலிஸ், 39வது சதம் அடித்து, இரண்டாம் இடத்தை ஆஸ்திரேலிய வீரர் பாண்டிங்குடன் (39 சதம்) பகிர்ந்து கொண்டார். அடுத்த இடத்தில், தலா 34 சதம் அடித்த கவாஸ்கர் (இந்தியா), லாரா (வெ.இண்டீஸ்) உள்ளனர்.

Add Comment