கடையநல்லூரில் கவுன்சிலர்கள் வீடு வீடாக துண்டு பிரசுரம் வினியோகம்

கடையநல்லூரில் கவுன்சிலர்கள் சிலர் வீடு வீடாக துண்டு பிரசுரம் வினியோகம் செய்தனர்.கடையநல்லூர் நகராட்சியில் புதிய குடி நீர் திட்டம் சுமார் 22 கோடி ரூபாய் செலவில் நடந்து வருகிறது.

இத்திட்டத்தில் சுமார் 7 வாட்டர் டேங்குகளும், புதிதாக 7ஆயிரம் குடிநீர் இணைப்புகளும் வழங்கப்பட இருப்பதாக தெரிகிறது. இந்த பணிகள் முடிவடைவதற்குள் நகராட்சியில் புதிய சாலைகள் அமைப்பதற்கான நடவடிக்கைககள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கடையநல்லூர் நகராட்சியில் பொதுமக்கள் சிந்திப்பீர் என்ற தலைப்பில் நகராட்சி கவுன்சிலர்கள் சிலர் வீடு வீடாக சென்று நேற்று துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர்.

அதில் புதிதாக நகராட்சியில் குடிநீர் திட்டம் நடந்து வருவதாகவும், இப்பணிகள் நடக்கும் போது எல்லா பகுதிகளிலும் பகிர்மான குழாய் பதிக்கப்பட்டுள்ளதா. பழைய குடிநீர் இணைப்பை புதிய குழாய்களில் buy Amoxil online இணைத்துள்ளார்களா. புதிய குடிநீர் இணைப்புகள் வழங்குவதற்கு நகராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளதா என்பது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இது தொடர்பான பணிகள் முடிந்த பிறகு நீர்வரத்து சரிபார்க்க வேண்டியிருப்பதாகவும், இதற்கிடையில் கடையநல்லூர் நகராட்சியில் கடந்த மாதம் 25ம் தேதி நடந்த கூட்டத்தில் சுமார் 6 கோடியே 94 லட்சம் ரூபாய் அரசு வழங்கிய தொகையில் பணிகள் மேற்கொள்ள தீர்மானத்தை நிறைவேற்றியிருப்பதாகவும், மேற்கண்ட குடிநீர் திட்டப்பணிகள் முடிவடையாத நிலையில் சாலைகளை புதிதாக அமைத்தால் வீட்டுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கும்போது அந்த சாலைகளை புதிதாக தோண்டும் போது அதற்கான செலவுகளை பொதுமக்கள்மீது தான் சுமத்துவார்கள்.

எனவே குடிநீர் அபிவிருத்தி திட்டத்தில் பணிகள் அனைத்தும் முடிந்த பிறகு புதிய சாலைகள் அமைக்கும் பணி தொடங்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையில் முக்கிய அரசியல் கட்சி கவுன்சிலர்கள் கட்சி வேறுபாடின்றி வீடு வீடாக தங்களின் வார்டுகளில் துண்டு பிரசுரங்களை நேற்று முழுவதும் பரவலாக வினியோகம் செய்ததை காண முடிந்தது. இதனால் நகராட்சி முழுவதும் நேற்று பரபரப்பான நிலை காணப்பட்டது.

Source:dinamalar

Add Comment