கடையநல்லூரில் மின்வெட்டு 12 மணி நேரமாக உயர்வு…

கடையநல்லூரில் Ampicillin online மின்வெட்டு 12 மணி நேரமாக உயர்வு…

கடையநல்லூரில் மின்வெட்டு 12 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மின்வெட்டு கடந்த 2 வருடமாக தீர்க்கமுடியாத பிரச்னையாக நீடித்துவருகிறது. அதுவும் கோடை காலத்தில் மக்களால் தாங்க முடியாத அளவிற்கு மின்தடை ஏற்படுகிறது. இதனால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர்.

கடந்த சில தினங்களாக வெயில் அளவு படிப்படியாக உயர்ந்து வரும் நிலையில் காற்றாலை மின்உற்பத்தி அறவே இல்லாததால் நாள்தோறும் சராசரியாக கிடைக்க வேண்டிய ஆயிரத்து 500 கிலோவாட் மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தற்போது அனல் மின் நிலையங்களிலும் அவ்வப்போது பழுது ஏற்பட்டு மின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது.

மேலும் கூடங்குளம் உள்ளிட்ட புதிய மின் உற்பத்தி திட்டங்களும் செயல்பாட்டிற்கு வராமல் இழுத்தடிக்கப்படுகிறது. மேற்கண்ட காரணங்களால் தமிழக மின் வாரியம் மின் தடை என்ற படுகுழியில் இருந்து மீளமுடியாமல் தவிக்கிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக மின்வெட்டு நேரம் படிப்படியாக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் கிராமப் பகுதிகளில் அதிகபட்சமாக 12 மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது. நகர் பகுதிகளில் 9 முதல் 10 மணி நேரமாக மின்தடை உயர்ந்துள்ளது.

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மட்டுமின்றி தொழில், விவசாயப்பணிகளும் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளன. கிராமங்களில் பகலில் தலா 3 மணி நேரம் வீதம் 2 முறையும், இதுதவிர 2 மணி நேரமும் இரவில் மின் உற்பத்தி மற்றும் நுகர்வுக்கு ஏற்ப ஒருமணி நேரத்திற்கு ஒரு முறையுமாக நள்ளிரவு வரை மின்தடை செய்யப்படுகிறது.

புதிய மின் உற்பத்தி திட்டங்கள் செயல்பாட்டிற்கு வராத நிலையில் அடுத்த ஒன்றரை மாதங்களுக்கு இதே நிலை நீடிக்கலாம் என மின்வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. ஒரு வேளை காற்றாலை மின் சாரம் கைகொடுத்தால் மின் தடை நேரத்தில் சிறிய மாறு தலை எதிர்பார்க்கலாம் எனவும் அவர்கள் கூறினர்.

Add Comment