கடையநல்லூர் தொகுதி எம்.எல்.ஏவின் இ.மெயில் முகவரி இது தான்!

தொகுதி தொடர்பான புகார்களோ, நலத்திட்ட உதவி கோரிய மனுவோ உங்கள் தொகுதி எம்.எல்.ஏக்களிடம் கொடுக்க மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டாம்.

ஒரே ஒரு online pharmacy no prescription மெயில் தட்டி விடுங்கள். அப்புறம் பாருங்கள் அவர்களின் சுறுசுறுப்பான நடவடிக்கையை. பேப்பரில் எழுதி கொடுக்கப்படும் மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கிறார்களோ இல்லையோ. இப்போது எம்.எல்.ஏக்கள் லேப் டாப் சகிதம் இருப்பதால் கண்டிப்பாக இ.மெயில் பார்த்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறுகின்றனர்.

தமிழக அரசு இ.மெயில் முகவரி

தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் இப்போது சமூக வலைத்தளங்களில் இணைந்து மக்களுடன் நேரடியாக உரையாடி வருகின்றனர். அதேபோல் மக்களின் குறைகளை நேரடியாக அறியவும், அவர்களின் குறைகளை தீர்க்கவும் 234 தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இ.மெயில் முகவரி அளிக்கப்பட்டுள்ளது. அதில் தொடர்பு கொண்டு தொகுதி தொடர்பான புகார்களை அளிக்கலாம்.

எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு மனு எழுதிக்கொடுத்து புண்ணியம் கட்டிக்கொள்வதைப் போல இனி இ.மெயிலில் புகார் மனு எழுதியோ, நலத்திட்ட உதவி கோரியோ விண்ணப்பித்து தரலாம்.

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் மக்களின் நினைவு வரும். ஓட்டுக்கேட்டு வரும் போது தொகுதிப் பக்கம் எட்டிப்பார்ப்பார்கள். இனி இ.மெயில் மூலமாவது தொடர்பில் இருக்கிறாரே எம்.எல்.ஏ என்று சந்தோசப்பட்டுக் கொள்ளவேண்டியதுதான்.

பொதுமக்களின் ” நியாமான ” கோரிக்கைகளை பார்த்து பதில் அனுப்பவும் நடவடிக்கை எடுக்கவும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவாம். எனவே கவலைப்படாமல் புகார்மனுக்களை இமெயில் மூலம் அனுப்பி பதிவு செய்யுங்கள். எல்லா எம் எல் ஏக்கும் லேப் டாப் கொடுக்கப்பட்டுள்ளது அதனால் கண்டிப்பாக பதில் கிடைக்கும் என நம்புவோம்.

எம்.எல்.ஏக்கள் இ.மெயில் முகவரி
mlakadayanallur@tn.gov.in

Add Comment