கடையநல்லூர் நகராட்சி நடத்தும் மாபெரும் தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்

கடையநல்லூர் நகராட்சி நடத்தும் மாபெரும் தொழில் திறன் மேம்பாட்டு Buy Bactrim பயிற்சி முகாம்

பொன்விழா ஆண்டு நகர்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கடையநல்லூர் நகராட்சி பகுதியில் வறுமை கோட்டுக்கு கீழ் வசிக்கும் குடும்பங்களிலுள்ள இளைஞர்களுக்கு தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி கடையநல்லூர் நகராட்சி மூலம் வழங்கப்படுகிறது.

download (1)

பயிற்சியின் விபரம் :
1. தையல் பயிற்சி
2. நர்சிங் பயிற்சி
3. பியுட்டிசியன் பயிற்சி
4. tally பயிற்சி
5. ரீவைண்டிங் ac /dc மோட்டர்கள்
6. வீடு மற்றும் தொழிற்சாலைகளுக்கான வயரிங் பயிற்சி
7. எலெக்ட்ரிகல் சாதனங்கள் பழுது நீக்குதல் பயிற்சி
8. பேட்டரிஸ் பராமரித்தல் பயிற்சி போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

பயிற்சியில் சேர தகுதிகள் :

1. கடையநல்லூர் நகராட்சி பகுதியில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களாக இருத்தல் வேண்டும்.
2. 18 முதல் 45 வயது உள்ள ஆண், பெண், திருநங்கை, மாற்று திறனாளிகள் ஆகியோர் பயிற்சி பெற தகுதியுடையோர் ஆவர்.
3. 5ஆம் வகுப்பு அதற்கு மேல் எழுத படிக்க தெரிந்தவராக இருத்தல் வேண்டும்.

பயிற்சி பெற விரும்புவோர்:

குடும்ப அட்டை நகல் ,
கல்விதகுதிக்கான சான்றிதழ் நகல் ,
பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றுடன் நகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.

பயிற்சி முகாம் நடைபெறும் நாள் :

27.03.2013(புதன்) மற்றும் 28.03.2013(வியாழன்)

இடம் : கடையநல்லூர் நகராட்சி

கடையநல்லூர் பொது மக்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி, kdnl.net

தொகுப்பு,
க.கா.செ.

Add Comment