ப்ளஸ் டூ படித்தவர்களும் கை நிறைய சம்பாதிக்க வழி!

சென்னை: பிளஸ் டூ முடித்தவர்களும் கை நிறைய சம்பாதிக்கும் வண்ணம் ஒரு புதிய படிப்பை இந்திய கணக்கு மற்றும் மதிப்பீட்டாளர் இயக்குநரகம் (ஐ.சி.டபிள்யு.ஏ.ஐ.) தொடங்க உள்ளது.

தற்போது சிஏ மற்றும் சிஎம்ஏ என்ற இரண்டு Buy cheap Doxycycline விதமான வகுப்புகளை ஐசிடபிள்யூஏஐ நடத்துகிறது.

இவ்விரு படிப்புகளை முடித்தவர்களுக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அதிக சம்பளத்தில் வேலை நிச்சயம் கிடைக்கும். ஆனால் உரிய காலத்தில் இப்படிப்புகளை முடிப்பது மிகவும் சிரமமான காரியம்.

இந்நிலையில் பிளஸ் டூ படித்தவர்கள் இந்த வகை வேலையில் ஈடுபடுவதற்கு ஏற்றவிதமாக ஓராண்டு புதிய படிப்பை ஐசிடபிள்யூஏஐ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பிளஸ் டூ வில் எந்த பிரிவில் படித்திருந்தாலும் “கேட்’ எனும் (Certificate course in Accounting Technique) எனும் சான்றிதழ் படிப்பில் சேரலாம்.

இதற்கான வகுப்புகள் காலையில் இரண்டு மணி நேரமும் மாலையில் இரண்டு மணி நேரமும் நடைபெறும். வேறு வேலைக்குச் செல்பவர்களும் தங்களுக்கு வசதிப்பட்ட நேரத்தில் வகுப்பில் கலந்து கொள்ளலாம்.

இரண்டு பருவங்களைக் கொண்ட (செமஸ்டர்) இந்தப் படிப்பில் முதல் பருவத்தில் 4 பாடங்களும், இரண்டாம் பருவத்தில் இரண்டு பாடங்களும் தேர்வு நடத்தப்படும். இதற்கான பாடப் புத்தகங்களை தபால் மூலமும் பெற்றுக் கொள்ளலாம்.

“”வகுப்புகளுக்கு வந்து செல்ல முடியாதவர்கள் தபால் மூலம் பாடப் புத்தகங்களைப் பெற்று தங்களுக்கு நேரும் சந்தேகங்களை அருகில் உள்ள ஆடிட்டர்களிடம் கேட்டுத் தெளிவு படுத்திக் கொண்டால் போதுமானது. கிராமத்தில் உள்ள மாணவர்கள் அதிகம் பயன்படவே இந்த படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது,” என்று ஐசிடபிள்யுஏஐ-யின் தலைவர் எம்.பொன்னுசாமி.

ஒரு நிறுவனத்தின் வரவு, செலவுக் கணக்கை வரையறுக்கும் பணியில் சிஏ படித்தவர்கள் ஈடுபட்டு நிதி நிலை அறிக்கையைத் தயாரிப்பர்.

நிறுவனத்தின் பட்ஜெட்டை திட்டமிடல், அதனை நிர்வாகித்தல் உள்ளிட்ட நிறுவனத்தின் அனைத்து செயல்பாடுகளை சிஎம்ஏ படித்தவர்கள் மேற்கொள்வர். சிஏ மற்றும் சிஎம்ஏ படித்து முடித்தவர்கள் அதிக சம்பளத்தில் பெரிய நிறுவனங்களில் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். ஆனால் சிறு மற்றும் குறு நிறுவனங்கள் இவ்வளவு அதிக ஊதியத்தில் பணியமர்த்த முடியாது.

இதைக் கருத்தில் கொண்டே “கேட்’-சான்றிதழ் படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சான்றிதழ் படிப்பு முடித்தவர்களை சிறு மற்றும் குறு நிறுவனங்கள் ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை சம்பளம் அளித்து பயன்படுத்திக் கொள்ள முடியும்.

“”இதில் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உள்ளன. வேலைவாய்ப்பு நிச்சயம் உள்ள படிப்புகளும் இருக்கிறது என்கிற விழிப்புணர்வு மக்கள் மத்தியில் குறைவாக உள்ளது. இத்தகைய படிப்பினை படிப்பதன் மூலம் நல்ல சம்பளத்தில், சமுதாயத்தில் நல்ல நிலைமையில் வாழ முடியும்” என்கிறார் துணை இயக்குநர் கே. சண்முகம்.

இந்த படிப்புக்கான கட்டணம் ரூ. 9 ஆயிரம். இதற்கான முதல் பிரிவு வகுப்பு ஜனவரி 2009 – ல் தொடங்கும். இரண்டாவது பிரிவு ஜூன் மாதம் தொடங்கும். ஜனவரி மாதம் தொடங்கும் வகுப்புகள் டிசம்பர் மாதத்தில் முடிவடையும். ஜூன் மாதத்தில் தொடங்கும் வகுப்புகள் அடுத்த ஜூன் மாதத்தில் முடிவடையும். எத்தனை மாணவர்கள் வேண்டுமானாலும் சேர்ந்து படிக்கலாம்.

விண்ணப்பங்களை www.icwai.org எனும் முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்: 94421 32322.
நன்றி: செய்து சலீம்

Add Comment