சிட்னி டெஸ்ட்: இங்கிலாந்து ஆதிக்கம்

ஸ்டிராஸ், குக் அரை சதம் கடந்து அசத்த, சிட்னி டெஸ்டில் இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்த துவங்கி உள்ளது. முன்னதாக ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில், 280 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதும் வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. முதல் 4 போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடக்கிறது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 online pharmacy no prescription விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்திருந்தது. மைக்கேல் ஹசி (12) அவுட்டாகாமல் இருந்தார்.

ஜான்சன் அரை சதம்: நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது. மிடில் ஆர்டரில் ஹாடின் (6), ஸ்மித் (18) சோபிக்க வில்லை. ஹசி (33) ஆறுதல் அளித்தார். அடுத்து வந்த ஜான்சன் அதிரடியாக ஆடி ரன் சேர்த்தார். இவருக்கு ஹில்பெனாஸ் நல்ல ஒத்துழைப்புக் கொடுக்க, ஆஸ்திரேலியா 200 ரன்களை கடந்தது. டெஸ்ட் அரங்கில் 6 வது அரை சதம் கடந்து வெளியேறினார் ஜான்சன். இவர் 53 ரன்கள் சேர்த்தார். ஹில்பெனாஸ் 34 ரன்கள் சேர்க்க, 106.1 ஓவரில் “ஆல்-அவுட்டான’ ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 280 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன் 4, பிரஸ்னன் 3 விக்கெட் வீழ்த்தினர்.

ஸ்டிராஸ் அதிரடி: பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணிக்கு ஸ்டிராஸ் அதிரடி துவக்கம் தந்தார். ஆஸ்திரேலிய பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்த இவர், டெஸ்ட் அரங்கில் 24 வது அரை சதம் கடந்தார். இவர் 60 ரன்களுக்கு (8 பவுண்டரி, 1 சிக்சர்) அவுட்டானார். மறுமுனையில் குக், பொறுப்புடன் ஆடினார். டிராட் (0) இந்த முறை சொதப்பினார். அடுத்து வந்த பீட்டர்சன், தன்து பங்கிற்கு 34 ரன்கள் எடுத்து வெளியேறினார். நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்திருந்தது. குக் (61), ஆண்டர்சன் (1) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து அணி தற்போது முதல் இன்னிங்சில் 113 ரன்கள் பின்தங்கியுள்ளது. கைவசம் 7 விக்கெட்டுகள் உள்ள நிலையில், அதிக ரன்கள் குவித்து முன்னிலை பெற காத்திருக்கிறது.

Add Comment