ஐ.பி.எல்., ஏலம்: கும்ளே விலகல்

நான்காவது ஐ.பி.எல்., தொடருக்கான ஏலம் துவங்க, இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், இதிலிருந்து கும்ளே திடீரென விலகியுள்ளார். இருப்பினும், அணியின் தலைமை ஆலோசகராக தொடர உள்ளார்.

கடந்த 3 ஐ.பி.எல்., “டுவென்டி-20′ தொடர்களில் பெங்களூரு அணியில் விளையாடியவர் சுழல் ஜாம்பவான் அனில் கும்ளே. கடந்த இரு தொடர்களில், கும்ளே Bactrim online தலைமையில் பெங்களூரு அணி தலா ஒரு முறை பைனல் (2009), அரையிறுதிக்கு (2010) சென்றது. இவர் இதுவரை பங்கேற்ற 42 ஐ.பி.எல்., போட்டிகளில் 45 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

சமீபத்தில் கர்நாடக கிரிக்கெட் சங்கத்தில் தலைவராக தேர்வு பெற்றார். இதனிடையே 4வது தொடருக்காக, கேப்டன் கும்ளே அணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, விராத் கோஹ்லியை மட்டும் தக்கவைத்துக் கொள்ள, பெங்களூரு நிர்வாகம் முடிவு செய்தது. இதனால் சொந்த வேலைகள் மற்றும் கிரிக்கெட் நிர்வாகத்தில் கவனம் செலுத்த இருப்பதாக தெரிவித்து, ஐ.பி.எல்.,தொடர் உட்பட அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும், விலகுவதாக கும்ளே திடீரென அறிவித்துள்ளார்.

இதுகுறித்து கும்ளே கூறியது:கடந்த 3 ஐ.பி.எல்., தொடர்களில் மகிழ்ச்சியுடன் பங்கேற்றேன். தவிர, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக போட்டிகளில் பங்கேற்று வந்த எனக்கு, கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெரும் நேரம் வந்து விட்டது. இதனால் வரும் 8, 9ம் தேதிகளில் நடக்கும் வீரர்கள் ஏலத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். இதுவரை எனக்கு ஆதரவளித்த ரசிகர்கள் மற்றும் அனைவருக்கும் நன்றி.

சொந்த முடிவு:ஒரு வீரர் என்ற முறையில், பெங்களூரு அணி நிர்வாகம் என்னை தக்கவைத்துக் கொள்ளாததால் நான் கோபப்படவில்லை. இந்த காரணத்துக்காக நான் ஏலத்தில் இருந்து விலகவில்லை. என்னை அணியில் வைத்துக் கொள்ளாததற்கு, வேறு ஏதாவது காரணங்கள் இருக்கலாம். இந்த முடிவு நானாகத்தான் எடுத்தேன். இதனால் எந்த மனவருத்தமும் இல்லை.

சவாலுக்கு தயார்:பெங்களூரு அணியின் தலைமை ஆலோசகராக பொறுப்பேற்பதில் மிகவும் ஆர்வமாக உள்ளேன். கடந்த இரண்டு தொடர்களில் அசத்தியதால் பெங்களூரு அணி மீது, எல்லோருக்கும் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கேற்ப சவாலை ஏற்று, அணி நிர்வாகம் மற்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவேன் என நம்பிக்கை உள்ளது. இவ்வாறு கும்ளே கூறினார்.

Add Comment