கடையநல்லூரில் வறுத்தெடுக்கும் வெயில்… 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது…

கடையநல்லூரில் வறுத்தெடுக்கும் வெயில்… 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது…

கடையநல்லூரில் வெயில் தொடர்ந்து அதிகரித்து நேற்று 100 டிகிரியை தொட்டது. காற்றில் ஈரப்பதமும் குறைந்து வருவதால் பொதுமக்கள் புழுக்கத்தில் தவிக்கின்றனர்.

கடையநல்லூரில் கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டு வெயிலின் அளவு அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி குறைந்தபட்சமாக வெயில் அளவு 82 டிகிரி பாரன்ஹீட்டாகவும், அதிகபட்சமாக 96 டிகிரியாகவும் இருந்தது. கடந்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி வெயில் அளவு 84 & 95 டிகிரியாகவும் 2ஆம் தேதி 86 & 96 டிகிரியாகவும் பதிவாகியுள்ளது.

இந்த நாட்களில் காற்றின் வேகம் மணிக்கு 25 கி மீ முதல் 50 கி மீ வரை இருந்தது. காற்றில் ஈரப்பதம் 40 முதல் 60 சதவீதம் வரை பதிவானது. ஆனால், தற்போது சுற்றுச்சூழல் மாசுபடுதல், புவி வெப்பமடைதல், மழையின்மை, நிலத்தடி நீர்மட்டம் குறைவு உள்ளிட்ட காரணங்களால் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

கடந்த ஆண்டு தமிழகத்தின் பல பகுதிகளில் வெயில் அளவு 100 டிகிரியை தாண்டினாலும் கூட கடையநல்லூரில் 98.6 டிகிரியை தாண்டவில்லை. இந்நிலையில் தற்போது கடந்த இரு நாட்களாக வெயிலின் அளவு தொடர்ந்து அதிகரித்துள்ளது. குறிப்பாக மார்ச் 31ஆம் தேதி வெயில் Buy Levitra Online No Prescription அளவு 88 & 96 டிகிரியாகவும் ஏப்ரல் 1ஆம் தேதி 84 & 100 டிகிரியாகவும், நேற்று (2ஆம் தேதி) குறைந்தபட்சம் 82 டிகிரியாகவும், அதிகபட்சம் 100 டிகிரியாகவும் பதிவாகியுள்ளது.

மேலும் காற்றில் ஈரப்பதமும் குறைந்து கொண்டே வருகிறது. 45 சதவீதமாக இருந்த ஈரப்பதம் கடந்த 3 நாட்களில் 30 சதவீதமாக குறைந்துள்ளது. இது மேலும் குறையும் வாய்ப்புள்ளது என தெரிகிறது.

வெயிலின் அளவு மேலும் அதிகரித்து வரும் 7 மற்றும் 8ஆம் தேதிகளில் 102 டிகிரியாக உயரும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெயிலின் உக்கிரத்தால், பகல் நேரங்களில் சாலைகளில் பொதுமக்கள், டூவீலர் நடமாட்டம் குறைந்து வெறிச்சோடி காணப்படுகிறது. இரவு நேரத்திலும், வெப்பத்தின் தாக்கம் குறையாததால் பொதுமக்கள் புழுக்கத்தில் தவிக்கின்றனர்.

Add Comment