இரண்டாக பிரிகிறது சூடான் நாடு : மக்கள் வாக்கெடுப்பு தீவிரம்

ஆப்ரிக்க நாடான சூடான் நாட்டிலிருந்து தெற்கு மாகாணங்கள் சில இணைந்து தெற்கு சூடான் எனும் புதிய நாடு உருவாகவுள்ளது. இதற்கான மக்கள் வாக்கெடுப்பு கடந்த 2-ம் தேதி நடந்தது. எண்ணெய் வளம் கொழிக்கும் பெரிய ஆப்ரிக்க நாடுகளில் சூடான் நாடும் ஓன்று. இதன் தெற்கு மாகாணங்கள் தனியாக பிரிந்து தெற்கு சூடான் நாடு உருவாக கடந்த 2005-ம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி மேற்கொள்ளப்பட்டது. ஏறத்தாழ 22 ஆண்டுகளாக நடந்த உள்நாட்டு போரினால் இதுவரை 3.5 லட்சம் மக்கள் பலியாகியு்ளனர். அதன் பின்னரே மக்கள் வாக்கெடுப்பு மூலம் சூடான் நாட்டினை வடக்கு, தெற்கு என பிரிப்பதா, வேண்டாமா ? என தீர்மானிக்கப்பட்டது. அதன்படி கடந்த 2-ம் தேதி தெற்கு சூடான் மக்கள் வாக்கெடுப்பு கமிஷனர் சான்ரீக்மடுவாட் முன்னிலையில் நடந்தது. இந்நிலையில் மக்கள் வாக்கெடுப்பு குறித்து ஆலோசனை செய்ய சூடான் அதிபர் ஒமர்அல்-பஷீர் தலைநகர் ஜூபா நகருக்கு வந்தார். அவருக்கு ஜூபா விமான நிலையத்தில் தெற்கு சூடானின் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர் சால்வாகிரர், தகவல் தொடர்புத்துறை அமைச்சர் பார்னாபா மாரியால் ஆகியோர் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தனர். பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிக்கையில், சூடான் இரண்டாக பிரிவது தனிப்பட்ட முறையில் எனக்கு வருத்தம் அளிக்கிறது. எனினும் மக்களுக்கு நல்லது நடந்தால் சரிதான் என்றார். மக்கள் வாக்கெடுப்பு 100 சதவீதம் முடிந்துவிட்ட நிலையில் பெரும்பாலான மக்கள் சூடான் இரண்டாக பிரிவதை விரும்புகின்றனர். விரைவில் சூடான் இரண்டாக பிரி்ந்து தெற்கு சூடான், வடக்கு சூடான் Buy Bactrim என அழைக்கப்படும் என செய்தி நிறுவனங்கள் ‌தெரிவிக்கின்றன.

Add Comment