கடையநல்லூரை சுற்றித் திரிந்த காலங்கள் : ஹமீது ( பூச்சை )

சுற்றித் திரிந்த காலங்கள் : ஹமீது ( பூச்சை )

கடையநல்லூரை சுற்றி எத்தனை அழகான கிராமங்கள்,பசுமையான,புல்வெளிகளிகள் வயல்கள்,சுற்றித்திரிய நாட்கள் போதாது அதன் அழகை ரசிக்க கண்கள் சலிக்காது…            இதன் ஒரு பக்கம் மேற்க்கே மலை அடிவாரத்தின் வயல் பரப்பிலிருந்து 7 அல்லது 8 கிலோ மீட்டர் தூரமும்…மறு பக்கம் வடக்கிலும்,தெற்க்கிலும்,கிழக்கிலும் சூழ்ந்த அழகிய கிராமங்களின் நடுவே  அமையப்பெற்ற ஊர்தான் எங்கள் கடையநல்லூர்……..பல மசூதிகளும், கோவில்களும், தேவாலயமும் இவைகளோடு எல்லா மதத்தினரும் ஒற்றுமையாக வாழும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஊர்! என்  விடுமுறை நாட்களை அதிகமாக இந்த கிராமத்தில் தான் மிகுந்த மகிழ்ச்சியோடு களித்திருக்கிறேன்!…….வசந்த காலமும் சில பகுதிகளில் அறுவடைப் பருவமும், திருவிழாக்களின் காலமும் இரவுகள் மிகவும் குளிர்ந்திருப்பதும் அதிகாலையில் பனி மூட்டம் கொண்டிருப்பதும்……..இந்த நவம்பர் – டிசம்பர் சார்ந்த பருவ காலம்…..

(கிராமங்கள்,வயல்வெளிகள்,பறவைகள்,மரங்கள்,மழை)

இவைகளைக் காண எப்போதும் பொன்மாலை நேரங்களில் பார்க்க & ரசிக்க போவதுண்டு………இது தினந்தோரும்……….

 அதிகாலைநேரம் (கிராமங்கள்,வயல்வெளிகள்,பறவைகள்)                            உலகில் பல மாற்றங்களை அல்லாஹ் அதிகாலை நேரத்திலேயே செய்கின்றான்….

அல்லாஹ்வுடைய அற்ப்புதமான படைப்பினங்களைப் பார்க்க ஆவல் தூண்டும்………           அதனால் அதிகாலைநேரம் தொழுகைக்கு பின் மனம் ஏனோ                               ஒரு சிறு நடைபோட துடிக்கும்………..

அதிகாலையில் சாலையின் இரு ஓரங்களிலும் பசுமையான பல மரங்கள் அழகு காட்டி சாலையின் இருபக்கங்களின் சுத்தமான காற்றை வீசி கொண்டும்…………….                                                 தென்னை மரங்களும்,மாமரங்களும்,பூமரங்களும்,வேப்ப மரமும்,புளியமரமும்……..         செடி, கொடிகளும்,  கண்களுக்கு குளிர்ச்சியாகக் காட்சி தரும்……..                            சில வேளைகளில்  இலை,தழை இவைகளின் சப்தத்தால் சில பூச்சிகளும்…..      படபடவென்று ஒன்றாகப் பறக்கும் பட்டாம் பூச்சிகளும்……மரங்களில் உள்ள   பல்வேறுவிதமான பறவைகளின் சப்தத்தையும். (இதை எப்படி சொல்வதென்றே தெரியல)

அந்த அதிகாலையில் கொஞ்சம் பனி மூட்டம் சூழ்ந்த……..வேளையில் தங்களுடைய  மரங்களின் கூட்டிலிருந்து வெளி வரும் வெளிவரத்துடிக்கும்…………  புறாக்கள்,மைனா,கிளிகள்,வாத்து,குருவிகள்,காகம்,கொக்குகள்,மயில்கள்,குயில்களும்…..          இரவு முழுவதும் பறவைகளின் சிறகுகளின் அடைந்திருக்கும் அதன் குஞ்சுகளும் இன்னும் பல வகையான பறவைகள் கூ,கூ, கீச் கீச் என்று ஆரவாரத்துடனும் அன்றைய உணவைத்தேடி புறப்படும் நேரம் மரங்களிலும்  அதன் கிளைகளிலும் அங்கே இங்கே பறந்து விளையாடிக்கொண்டும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக தங்களுடைய மொழியால் கீதம் பாடி வரவேற்க்கும்…..சப்த்தத்தையும் வெளிக்காட்டிக் கொண்டிருக்கும் காட்சியையும் பார்த்ததும் மனதிற்க்கு சந்தோசமாகவும், இனிமையாகவும் இருக்கும்…….(இருந்தது)                    நான் நினைப்பது இவைகள் கூட நானும் விளையாடனும் போல இருக்கும்…..

கண்கள் காணும் காட்சிகளைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல……….

சூரியன் உதிப்பதற்க்கு சில நிமிடம் முன்னாடியே கூவிக்கூவி எல்லோரையும் எழுப்பி கொண்டிருக்கும் சேவல்களும், கோழிகளும் அந்த அதிகாலை வேளையில் அதன் கூண்டுகளை திறந்து விட்டதும் சேவல்கள் கூவிக்கொண்டும், இரவு முழுவதும் தாய்க்கோழிகள் தன் இறக்கையில் வைத்த தன் குஞ்சுகளை விடுவிப்பதும்….அதனை வளர்ப்பவர் அதற்க்கு உணவை போட்டுப் போன பிறகு… சேவல்களும்,கோழிகளும்…..அதன் குஞ்சுகள் சாப்பிடுவதற்க்காக குப்பையைக் கிளறி அந்த உணவை கொத்திக் கொண்டிருக்கும் வேளையில்……… குருவிகளும்,புறாக்களும்,அணில்களும்.. அதன் அருகிலே அந்த உணவை கொத்தி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் காட்சி….ம்ம்ம்ம்ம்…ரசித்துப் பார்த்தால்தான் இதனுடைய அற்புதம் எப்படியென்று தெரியும்……எந்த நேரமும் தன்னுடைய வீட்டு வாசலில் முன்பு கதவை திறந்து போட்டும், பழமையான கட்டிலும், பாயும் போட்டு நிம்மதியாக சுதந்திரமாக தூங்கும்       இந்த கிராம மக்கள்……..விடிந்ததும்….வயலுக்கு மாட்டை ஓட்டிக் கொண்டு போகும் மாட்டு வண்டிகளின் சப்த்தமும்… மாட்டு வண்டிகளின் பின்னாடி இரு வளையங்களில் கட்டிப் போட்டு அந்த வண்டிகளின் பின்னாடியே மே மே என்று கத்திகொண்டேப் போகும் அந்த ஆட்டுக்குட்டியின் சப்த்தமும்..விடிவதற்க்கு முன்னாடியே பால் கறந்த பின்னர் விடிந்ததும்  அதைக் கொடுப்பதற்க்காக அவசர அவசரமாக கிராமத்திலிருந்து எடுத்துக் கொண்டு போவதும்..       அதே வேளையில் ஹோய்.. ஹோய் … ட்ரா…ட்ரா என்று ஆடுகளையும்,மாடுகளையும் மேய்ப்பவன்.. தெருவை அடைத்துக்கொண்டு மேய்க்கப் போகும் போது சில பெண்கள் வலைக் கூடையைத் தூக்கிக்கொண்டு மாட்டுச் சாணத்தை எடுப்பதற்க்காக செல்லும் நேரம்……    எங்கோ போய் தண்ணிர் குடத்தை தலையிலும்,இடுப்பிலும் சுமந்து வந்து வீட்டு வாசலை சுத்தம் செய்து தண்ணீர் தெளித்த பின்னர் செடி,கொடிகளுக்கும் தண்ணீர் ஊற்றும் சில பெண்களும்…….குளங்களில் மீன் எப்போ மாட்டும் என்று  தூண்டிலை போட்டு மீன் மாட்டிவிட்டதை பார்க்க தண்ணீரில் மிதக்கும் (மயில் இறகு) தக்கையின் அசைவுகளை பார்த்துக்கொண்டும்…மீனையும்,நண்டுகளையும் பிடிப்பதற்க்காக காத்திருக்கும் கொக்குகளும்,நாரைகளும்,நீந்தி நீந்தி போகும் வாத்துகளும்,மீன் கொத்திப் பறவைகளும் ……                          கிராமத்தின் மரத்தடியில் அமைந்திருக்கும் குடிசைக் கடையில் டீ சாப்பிட்டுக் கொண்டே……சத்தமாக சொல்லும் வானொலியின் செய்தியைக் கேட்க்கும் ஒரு சில வயதானவர்களும்….சிலர் புளியம் பழத்தைப் பறித்துக் கொண்டிருப்பதும்……                வரும் காலம் எப்படியென்று தெரியாமல் சிறு மரங்களிலும் இயற்கையோடும் ஒன்றாகக் கலந்து சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் விளையாடும் இந்த சிறுவர்களும்……….

பசுமை நிறைந்த வாய்க்கால் வரப்புகளில் ஆண்களும்,பெண்களும்  தங்களுடைய கைகளில்  தூக்கு வாளியில் சாப்பாட்டையும்………….(பழைய சோரும், இரண்டு வெங்காயமும்,மிளகாயும்)                         கதிர்வெட்டி,மண்வெட்டி,களவெட்டி….இவைகளை தங்களுடைய….தோள்களிலும், தலையிலும்,…..ஒன்றாக சுமந்து செல்லும் காட்சி……….

போகும் வழியில் ஒரு பக்கம் வயலின் சேற்றின் வாசமும்,லேசான காற்றினால் ஆடும் அழகிய மலர்களின் வாசமும்…வயல் வரப்பின் நடுவே வாய்க்கால் வழியே              நெற்ப் பயிர்களுக்காக தத்தி தத்திப் பாய்ந்தோடும் தண்ணீரும்……மறு பக்கம் வாழை, கரும்பு,மா,தென்னை மரத் தோப்புகளின் மண்வாசனையும்……..இந்த தோப்புகளின் நடுவே இருக்கும் கிணற்றின் அருகே தொட்டியில் நிறைந்து வயலுக்குப் வேகமாக பாய்ந்தோடும் தண்ணீரும்…….இவைகளைப் பார்ப்பதற்க்கு                                    கண்ணீருக்குக் குளிர்ச்சியாகவும்….மனதிற்க்கு சந்தோசமாகவும் இருக்கும்……       அமைதியான சூழல்,சுத்தமான காற்று….கொஞ்ச நேரம் மரத்தின் நிழலில் அமர்ந்து……….      கொண்டு வந்த கரும்பை அந்த பனி மூட்டம் இருக்கும் நேரத்தில் சாப்பிட்டுக் கொண்டே இயற்கையின் அழகை ரசித்துக் கொண்டிருக்கும் நேரம்…..கொஞ்சம் திரும்பி மேலே பார்க்கிறேன் மின் கம்பியில் வரிசையாக அமர்ந்து என்னை வேடிக்கைப் பார்க்கும்                  சின்னஞ் சிறு பறவைகள்………(ம்ம்ம் சான்ஸே இல்லே) சொல்லிக்கொண்டே போகலாம்……                                                                             விடிந்த சில மணி நேரங்களிலே நான் பார்த்த பறவைகளும்,மனிதர்களும்…இன்னும் சில உயிரினங்களும்……….அவைகள் எல்லாமே அன்றைய உணவைத்தேடி புறப்பட்டு விட்டன………                 நான் பார்த்த காட்சிகளும்,சப்தங்களையும்,குயில்களின் கூவல்களையும்………           இப்போது அதை காண முடியவில்லை……மரங்களில் கூட்டம் கூட்டமாக விளையாடிக் கொண்டிருந்த பறவைகள் எல்லாம் உணவைத்தேடி பறந்ததும்….அந்த பறவைகள் எல்லாம் எப்போது வரும் என்று அமைதியாக எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும்            அதன் குஞ்சுகளும்,  அடைக்கலம் கொடுத்த மரங்களும்…….ம்ம்ம்ம்ம்ம்ம்                                எனக்குள் ஆர்வம் கூடியது அவைகள் எங்கே போனது என்று அறிய……….                                                                       இந்த பறவைகள் எங்கே போகிறது என்று பார்க்க நானும் அந்த அதிகாலையில் என்னுடைய நண்பனோடு (கொஞ்சம்இடியப்பம்,வாழைஇலை) எடுத்துக்கொண்டு  பெரியாறு வழியாக போகும் போது அங்கே சிரு குடிசையில் முதியவர் ஒருவரிடம் சுக்காப்பி வாங்கிக் குடித்துக் கொண்டே கரடுமுரடான பாதை வழியாக போய்க் கொண்டு இருந்தேன்…… ஆறு,வயல்கள்,தோப்புகள், பல கடந்து எங்கேயெல்லாமோ சுற்றி கடைசியில் நாங்கள் ஊரின் தெருவில் இருந்து பார்த்த அந்த பசுமையான மேற்கு தொடர்ச்சி மலையை அன்று அதன் அருகிலே பார்க்கிறேன்………(இந்த சோலைகளைப் பற்றி எழுதிக்கொண்டேப் போகலாம்……)

அந்த மலையின் அடிவாரத்தில் இருந்த தோப்புகளிலும்…………. வயல்களிலும்,குளங்களிலும்…சில பறவைகள் அதனது உணவான மீன்களையும், நண்டுகளையும், தனது அழகான அலகுகளால் கொய்து buy Lasix online கொண்டு இருக்கும் நேரம் நானும்                 வாய்க்கால் வரப்பில் ஓடுகின்ற தண்ணீரில் கை கழுவிக் கொண்டு தோப்பில் உட்கார்ந்து வாழை இலையை விரித்து அந்த இயற்க்கையோடு இயற்க்கையாக கலந்து  சாப்பிட்டுக் கொண்டே…வயல்களில் லேசான காற்றின் அசைவுகளினால் ஆடும் அந்த பசுமையான      புல் வெளிகளையும்,மலர்களையும், ஜிலு ஜிலுவென்று அடிக்கும் அந்த தோப்புகளின் மரங்களின் பசுமை நிறைந்த சோலைகளையும்………..வாய்க்காலிலும்,வயல்களிலும்  குளங்களின் தண்ணீரிலும் பட்டும் படாமலும் கூட்டமாக அதன் உணவை              கொத்திக் கொண்டு சேர்ந்து பறக்கும் பறந்து கொண்டிருக்கும் அந்த பறவைகள்………
இதோ நானும் அவைகளோடு பறந்து கொண்டிருக்கிறேன் தணியாக……….துபாய்க்கு……

by hameed

Add Comment