அணு உலைகளை பார்வையிட ஐரோப்பிய நாடுகளுக்கு ஈரான் அழைப்பு

ஈரானின் அணு திட்டங்கள் மற்றும் அணு உலைகளை ஐரோப்பியன் யூனியன் நாடுகள் பார்வையிடலாம் என ஈரான் அதிரடியாக Doxycycline No Prescription அறிவித்துள்ளது. அணு ஆயுதம் தயாரிப்பதாகவும், யுரேனியம் செறிவூட்டுவதாகவும் ஈரான் மீது அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் குற்றம்சாட்டி வந்தன.இது தொடர்பாக ஈரான் மீது பொருளாதார தடை விதிக்க ஐ.நா.வை வலியுறுத்தின. மேலும் சர்வ‌தேச அணுசக்தி ஏஜென்சியும் ஈரானின் அணு திட்டங்கள் மற்றும் யுரேனியம் செறிவூட்டும் மையங்களை பார்வையிட்டுள்ளது. இந்நிலையில் ஐரோப்பிய நாடான ரஷ்யா, மற்றும் சீனா உள்ளிட்ட நாட்டு தூதரகங்களுக்கு ஈரான் கடிதம் ஒன்று எழுதியுள்ளது. அதில் ஈரான் தனது மின்தேவையினை பூர்த்தி செய்யவும், அமைதி வழியிலும் அணு திட்டங்களையும், யுரேனியம் செறிவூட்டுவதையும் நடத்தி வருகிறது. அணு ஆயுதம் தயாரிப்பதற்காக அல்ல. இது தொடர்பாக தாரளமாக ஈரானுக்கு வந்து அணு திட்டங்களையும், அணு உலைகளையும் பார்வையிடலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment