கடையநல்லூரில் அனைவருக்கும் இலவச டிவி., கிடைக்க ஏற்பாடு : எம்எல்ஏ., தகவல்

கடையநல்லூர் சட்டசபை தொகுதியில் 1.5 லட்சம் பயனாளிகளுக்கு இலவச வேஷ்டி, சேலை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் இலவச கலர் டிவி., கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என எம்எல்ஏ., பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார். இதுகுறித்து கடையநல்லூர் எம்எல்ஏ., பீட்டர் அல்போன்ஸ் கூறியதாவது: தமிழக அரசின் சார்பில் தமிழ்புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் இலவசமாக வேட்டி, சேலை வழங்கப்பட்டு வருகிறது. கடையநல்லூர் தொகுதியில் நடப்பாண்டில் சுமார் 1.5 லட்சம் இலவச வேஷ்டி, சேலை ஒதுக்கீடு Cialis online செய்யப்பட்டுள்ளது. இதனை பயனாளிகளுக்கு விநியோகம் செய்யும் பணிகளும் விரைந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழக அரசின் சார்பில் பொங்கல் விழாவை முன்னிட்டு வழங்கப்படும் பொங்கல் பை வினியோகமும் தீவிரமாக நடந்து வருகிறது. கடையநல்லூர் நகராட்சி பகுதியில் அமைந்துள்ள மக்களுக்கு தமிழக அரசின் இலவச கலர் டிவி வழங்கிடும் பணி வருவாய்த்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பகுதியில் பயனாளிகள் சிலருக்கு இலவச கலர் டிவிக்கள் கிடைக்கப்பெறாத நிலை இருப்பதாக கூறப்படுகிறது. நகராட்சிக்கு மேலும் கூடுதலாக கலர் டிவி சிறப்பு ஒதுக்கீட்டின் அடிப்படையில் அனுமதிக்க வேண்டுமென தமிழக முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் ஆகியோரிடம் நேரிடையாக கேட்டுக்கொள்ளப்பட்டது. இதற்கான அனுமதியுடன் கூடுதல் டிவி கிடைக்கப்பெறும் வகையில் அனைவருக்கும் டிவி வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். தென்காசியிலிருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் விரைவு ரயில் இயக்க வேண்டுமென முக்கிய அரசியல் கட்சிகளும், ரயில்பயணிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தென்மாவட்டத்தில் உள்ள ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு பகல் நேரத்தில் சென்னை- செங்கோட்டை வழித்தடத்தில் புதிய ரயில் இயக்கிட வரும் ரயில்வே பட்ஜெட்டில் ஏற்பாடு செய்ய வேண்டுமென ரயில்வே துறை அமைச்சர் மம்தா பனார்ஜி, இணை அமைச்சர் அகமது ஆகியோருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது எம்எல்ஏ.,வுடன் அலுவலக மேலாளர் புலவர் செல்வராஜ், முன்னாள் யூனியன் தலைவர் அய்யாத்துரை, சுந்தரேசபுரம் சுந்தரய்யா, வட்டார காங்.,தலைவர்கள் கிளாங்காடு மணி, ஆலங்குளம் செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

Add Comment