பிப்ரவரி 4, துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாத் பேச்சுப் போட்டி

Buy Viagra Online No Prescription justify;”>துபாய் : துபாய் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் (ஈமான்) இவ்வாண்டுக்கான மீலாத் பேச்சுப் போட்டியினை 04.02.2011 வெள்ளிக்கிழமை மாலை அஸர் தொழுகைக்குப் பின்னர் சரியாக 4.30 மணிக்கு நடத்த இருக்கிறது.

இன்றைக்கும் பொருந்துகிற இறுதித்தூதரின் சொற்கள், அரபகம் – அண்ணலாரின் வருகைக்கு முன்னரும், பின்னரும் ஆகிய தலைப்புகளில் போட்டியாளர்கள் பேசலாம்.

அனைத்து சமூகத்தினரும் இப்போட்டியில் பங்கு பெறலாம். போட்டியாளர்களுக்கு 18 வயது நிரம்பி இருக்க வேண்டும். பேசுவதற்கான நேரம் 5 நிமிடங்கள். தமிழில் மட்டுமே பேச வேண்டும். போட்டியாளர் இரண்டு தலைப்புகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யலாம். போட்டியாளர்கள் 15 நிமிடங்கள் முன்னதாக வந்து வருகையை உறுதி செய்ய வேண்டும்.

போட்டி நடைபெறும் இடம் பின்னர் அறிவிக்கப்படும்.

மேலதிக விபரங்களுக்கு 050 5196433 / 050 467 4399 / 050 58 53 888 / 050 475 3052 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு விண்ணப்பங்களைப் பெற்று பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பேச்சுப் போட்டியில் விண்ணப்பிக்க இறுதி நாள் : 20 ஜனவரி 2011

இப்போட்டியில் வெற்றி பெறுவோருக்கு எமிரேட்ஸ் விமான நிறுவனம் வழங்கும் துபாய் – சென்னை – துபாய் பயணச்சீட்டும், லேண்ட்மார்க் ஹோட்டல் வழங்கும் 8 கிராம் தங்க நாணயம், ஈடிஏ அஸ்கான் குழுமம் வழங்கும் திர்ஹம் 1000 க்கான பரிசுக் கூப்பன், இந்தியா சில்க் ஹவுஸ் வழங்கும் திர்ஹம் 500-க்கான பரிசுக் கூப்பன், மஸ்ரிக் இண்டர்நேஷனல் வழங்கும் மூன்று கைக்கடிகாரங்கள், அல் ஹஸீனா ஜுவல்லர்ஸ் வழங்கும் திர்ஹம் 200 க்கான பரிசுக் கூப்பன்கள் பத்து, திருச்சி வெல்கேர் மருத்துவமனை வழங்கும் திர்ஹம் 200 க்கான பரிசுக் கூப்பன்கள் ஐந்து, மற்றும் பல்வேறு பரிசுகளும் வழங்கப்பட இருக்கின்றன.

இன்ஷா அல்லாஹ் ரபீயுல் பிறை 1 ( 03.02.2011 ) முதல் பிறை 12 ( 14.02.2011 ) வரை குவைத் பள்ளியில் இஷா தொழுகைக்குப் பின்னர் மௌலிது மஜ்லிஸ் நடைபெறும்.

Add Comment