துபாயில் திருக்குர்ஆனை புரிந்து கொள்ள உதவிய எளிய பயிற்சி முகாம்

Buy Viagra size-full wp-image-3507″ title=”unar2″ src=”http://kadayanallur.org/wp-content/uploads/2011/01/unar2.jpg” alt=”” width=”193″ height=”144″ />துபாயில் திருக்குர்ஆனை புரிந்து கொள்ள உதவிய எளிய பயிற்சி முகாம்

துபாய் : துபாயில் ஏர்வாடி முஸ்லீம் சங்கம் ( EMAN ) நடத்திய ”எளிய முறையில் திருக்குர்ஆனை புரிந்து கொள்வோம்” எனும் பயிற்சி முகாம் 31.12.2010 அன்று துபாயில் உள்ள சென்ட்ரல் பள்ளியில் சிறப்பான முறையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் எதிர்பார்த்ததற்கும் மேலாக ஏறத்தாழ 200 சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர். ஏர்வாடி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த சகோதர சகோதரிகள் இந்த நிகழ்வில் கலந்து பயன் பெற்றனர்.

துவக்கமாக பீர் முஹம்மது ( துபை டிவி) வரவேற்புரை நிகழ்த்தினார். பின்னர் சகோதரர் ஜலாலுதீன் அவர்கள் திருக்குர்ஆனை எளிதாக எவ்வாறு கற்றுக் கொள்வது என்பதை பல்வேறு உதாரணங்களுடனும் நகைச்சுவை இழையோட பயிற்றுவித்தார்கள். காலை 9.30 மணிக்கு தொடங்கிய முதல் அமர்வு மதியம் 12 மணி வரை நடைபெற்றது.

பின்னர் ஜும்மா தொழுகையைத் தொடர்ந்து வந்திருந்த அனைவருக்கும் மதிய விருந்து வழங்கப்பட்டது. பின்னர் இரண்டாம் அமர்வு மதியம் இரண்டு மணிக்கு தொடங்கியது. இந்த அமர்வு மாலை 3.45 வரை நடைபெற்றது. அஸர் தொழுகை மற்றும் தேனீர் இடைவேளைக்கு பிறகு மூன்றாம் அமர்வு மாலை 4.15 நடைபெற்றது. இந்த அமர்வு மஃரிப் தொழுகை வரை நடைபெற்றது. பின்னர் இறுதி அமர்வு மக்ரிப் தொழுகையிலிருந்து 7.30 வரை நடைபெற்றது.

பெற்றோர்களுடன் வந்திருந்த குழந்தைகளுக்காக தனியாக கிராஅத் போட்டி,ஓவியப் போட்டி மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதனை ஜாஹிர் ஆலிம் மற்றும் ஜமீல் ஆகியோர் சிறந்த முறையில் நடத்தினர்.இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு நிகழ்ச்சியின் இறுதியில் பரிசுகள் வழங்கப்பட்டது.

திருக்குர்ஆனை எளிய முறையில் கற்றுக் கொடுத்தும் அதற்காக ஊக்கம் அளித்தும் ஏறத்தாழ 7 மணி நேரங்கள் உரையாற்றிய சகோதரர் ஜலாலுதீன் அவர்களுக்கு ஏர்வாடி முஸ்லிம் சங்கத்தின் சார்பாக நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.இதனை ஷேக் அப்துல் காதர் மற்றும் அபுதாபி ரபிக் ஆகியோர் வழங்கினார்கள். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தொடர்ந்து பயிற்சி எடுக்கும் வகையில் சிடி வழங்கப்பட்டது.

ஷேக்பீர் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

திருக்குர்ஆனில் உள்ள 78000 வார்த்தைகளில் ஏறத்தாழ 40000 முறை திரும்ப திரும்ப வரும் சுமார் 100 வார்த்தைகள் இந்த நிகழ்வில் கற்றுக் கொடுக்கப்பட்டது. கலந்து கொண்டவர்கள் தொடர்ந்து பயிற்சி எடுத்து வந்தால் இன்ஷா அல்லாஹ் திருக்குர்ஆனை ஓதும்போதோ, கேட்கும்போதோ அதனுடைய மொழிபெயர்ப்பையும் அறிந்து கொள்ள முடியும்.

Add Comment