கடையநல்லூரில் காயிதே மில்லத் பிறந்த நாள் நிகழ்ச்சி

கடையநல்லூரில் காயிதே மில்லத் பிறந்த நாள் நிகழ்ச்சி – அன்னாரின் மஃபிரத்திற்காக துஆ

buy Bactrim online src=”http://kadayanallur.org/wp-content/uploads/2013/06/DSC00704-300×224.jpg” alt=”DSC00704″ width=”300″ height=”224″ class=”aligncenter size-medium wp-image-35093″ />

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நிறுவனர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் (ரஹ்) அவர்களின் 118-வது பிறந்த நாள் நிகழ்ச்சி கடையநல்லூர் காயிதே மில்லத் மன்ஸில் சார்பாக சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் (ரஹ்) அவர்களின் மறுமை வாழ்க்கைக்காக யாசீன் ஓதி துஆ செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு காயிதே மில்லத் மன்ஸில் தலைவர் இந்தி காசிம் அவர்கள் தலைமை வகித்தார்கள். மேலும் செயலாளர் சேகனா, மீரான், சிந்தா, முஹம்மது அலி, ஷாகுல் ஹமீது, நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞரணி தலைவர் கே.எம்.ரகுமத்துல்லாஹ், சாளை மைதீன், பக்கீர் மைதீன், அமானுல்லாஹ், அலாவுதீன் உட்பட அனைத்து பிறை நெஞ்சங்களும் கலந்து கொண்டு அவர்களின் மறு உலக வாழ்க்கைக்காக துஆ செய்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

DSC00708

தொகுப்பு,
க.கா.செ

Add Comment