சவூதி வாழ் இந்தியர்கள் சிறை செல்லாமல் காப்பாற்ற மத்திய அரசுக்கு ரியாத் காயிதே மில்லத் பேரவை கோரிக்கை

சவூதி வாழ் இந்தியர்கள் சிறை செல்லாமல் காப்பாற்ற மத்திய அரசுக்கு ரியாத் காயிதே மில்லத் பேரவை சார்பில் கோரிக்கை

சவூதி அரேபியாவின் நிதாகத் திட்டம் இந்தியர்களுக்கு வேலையில்லாத் திண்டாட்டத்தை மட்டுமல்லாது சிறைக்குச் செல்லும் நிலையையும் ஏற்படுத்தியுள்ளது மிகவும் வேதனைக்குரிய செய்தியாகும்.

சவூதி அரேபியாவில் உள்நாட்டவர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகப்படுத்தும் நோக்கோடு நிதாகத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதை நாம் மணிச்சுடரின் வாயிலாக ஏற்கனவே அறிந்துள்ளளோம். மேலும் மத்திய அரசு சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் இ.அஹமது நடத்திய பேச்சுவார்த்தையின் விளைவாக 3 மாதம் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 27000 இந்தியர்கள் இத்திட்டத்தால் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதையும், அனைவரும் இந்தியா திரும்ப விண்ணப்பித்திருப்பதாகவும் சவூதி அரசின் இந்திய தூதரகம் வாயிலாக நாம் அறிந்துள்ளோம்.

IMG_20130607_162815

3 மாத கால அவகாசத்துக்குள் அவர்கள் வெளியேறாவிட்டால் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பன போன்ற கடுமையான சட்டங்கள் சவூதி அரசால் கொண்டுவரப்பட்டுள்ளதை சவூதி அரசின் பத்திரிக்கைகள் மற்றும் இணைய தளங்கள் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், அரசு அறிவித்த 3 மாதத்தில் 2 மாதம் ஏற்கனவே முடிந்தாகிவிட்டது. இருப்பினும் இதுவரை விண்ணப்பித்த 27000 நபர்களில் 20 சதவிகிதம் மட்டுமே இதன் வாயிலாக இந்தியா திரும்பியுள்ளனர். மீதமுள்ள 80 சதவிகிதம் பேரை மீதமுள்ள 1 மாத கால அவகாசத்துக்குள் Ampicillin online இந்தியா திருப்பி அனுப்பும் நிலை என்பது முடியாத நிலையாக இருக்கிறது. இதற்குரிய காரணத்தை ஆராய்ந்தால், சவூதியில் தற்போது பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை காலங்கள் என்பதால் விமான பயணச்சீட்டு கிடைப்பது மிக அரிதாக உள்ளது. கிடைத்தாலும் வேலையிழந்து நாடு திரும்புபவர்கள் கட்ட இயலாத அதிக கட்டணங்களாகவும் உள்ளது. மேலும் குறைந்த கால அவகாசத்தில் இத்தனை பேரை இந்தியா திருப்பி அனுப்ப வேண்டும் என்பதும் தூதரகத்திற்கு மிக நெருக்கடியான நிலையாகும்.

இந்நிலையை சமாளிக்க சவூதியிலுள்ள இந்திய தூதரகம் இங்குள்ள ரியாத் காயிதே மில்லத் பேரவை உள்ளிட்ட தன்னார்வ தொண்டு இயக்கங்களின் உதவியை நாடியுள்ளது. இதனை தூதரகத்திலுள்ள இந்திய தூதுவர் இணையத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளார். அவர் கேட்டுக் கொண்டது யாதெனில், தன்னார்வ இயக்கங்கள் தூதரகத்தில் வந்திருந்து இங்கு வரும் நபர்களுக்கு விண்ணப்பம் பூர்த்தி செய்தல் மற்றும் வழிமுறைகளைக் கூறுதல் போன்ற செய்கைகளை செய்தால் தூதரகத்திற்கு உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார். ரியாத் காயிதே மில்லத் பேரவையின் சார்பில் இந்திய தூதரகத்தில் பணிபுரியும் பேரவையின் செயலாளர் இதில் முக்கியப் பங்காற்றி நம் நாட்டு மக்கள் தாயகம் திரும்ப உதவி வருகிறார், மட்டுமல்லாது பேரவையின் அனைத்து நிர்வாகிகளும் இதில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

இருப்பினும் கால அவகாசம் குறைவாக இருக்கும் காரணத்தால் இந்திய மத்திய அரசாங்கம், சவூதி அரசிடம் இதற்குரிய கால அவகாசத்தை அதிகப்படுத்தித் தருமாறும், இந்த நேரத்தில் விமான சேவைகளை அதிகப்படுத்தி குறைந்த கட்டணங்களை ஏற்படுத்தித்தர வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வைத்து இங்குள்ள இந்தியர்கள் சிறைகள் செல்லாமல் பாதுகாக்க வேண்டுமென்று ரியாத் காயிதே மில்லத் பேரவையின் நிர்வாக அவசர குழு கூட்டத்தில் இன்று முடிவு செய்யப்பட்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கிளை அமைப்புகளில் ஒன்றாக சவூதியில் செயல்படும் கே.எம்.சி.சி. (கேரளா முஸ்லிம் கலாச்சார நிறுவனம்) மற்றும் ரியாத் காயிதே மில்லத் பேரவை சார்பில் இந்திய மத்திய அரசுக்கு கோரிக்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

all

இது தொடர்பாக ரியாத் காயிதே மில்லத் பேரவை செயலாளர் எஸ்.எம்.முகம்மது நாசர், ஒருங்கிணைப்பாளர் கஸ்புல்லாஹ், அமைப்பாளர் சாகுல் ஹமீது, செய்தி தொடர்பு செயலாளர் க.கா.செய்யது இபுராகிம் ஆகியோர் கே.எம்.சி.சி.யின் சவூதி அரேபியா தேசிய செயலாளரும், ரியாத் பத்தாஹ் ஷிஃபா அல் ஜஸீரா மருத்துவமனையின் மேலாளரும், சந்திரிகா மலையாள பத்திரிக்கையின் சிறப்பாசிரியருமான அஷ்ரஃப் வெங்கட் அவர்களை இன்று மாலை சந்தித்துப் பேசினர். கே.எம்.சி.சி. மற்றும் ரியாத் காயிதே மில்லத் பேரவை சார்பில் முடிவெடுத்து இந்தத் தீர்மானம் இந்திய மத்திய அரசுக்கும் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைமையகத்திற்கும், தமிழக அரசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைமையகத்தின் வாயிலாகவும், தமிழக அரசின் வாயிலாகவும் மத்திய அரசுக்கும் இக்கோரிக்கையை வலியுறுத்த வேண்டுமென்று காயிதே மில்லத் பேரவை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்திய நலன் காக்க போராடி வரும் மத்திய அரசு பேரவையின் இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு நிதாகத் திட்டத்தின் கால வரையரையை நீட்டிப்பு செய்யுமாறும், சவூதியின் இந்த விடுமுறை நிலையில் குறைந்த கட்டணத்தில் விமான சேவையை அதிகப்படுத்தித் தருமாறும் சவூதி அரசிடம் வலியுறுத்தியும், இந்திய விமான அமைச்சகம் குறைந்த கட்டணத்தில் தற்சமயம் சவூதிக்கு அதிக விமான சேவையை வழங்க முன்வருமாறும், இந்தியர்கள் சிறை செல்லாமல் காப்பாற்ற வேண்டுமென்றும் ரியாத் காயிதே மில்லத் பேரவை சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

செய்தித் தொகுப்பு,
க.கா.செய்யது இபுராகிம்,
செய்தி தொடர்பு செயலாளர்,
ரியாத் காயிதே மில்லத் பேரவை.

Add Comment