கோப்பையை வெல்ல பிரேசிலின் துங்கா, அர்ஜென்டினாவின் மாரடோனா வகுக்கும் உத்திகள்

தென் ஆப்பிரிக்க உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் வீரர்களுக்கு இணையாக இரு பயிற்சியாளர்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளனர். அவர்கள் அர்ஜென்டினாவின் மாரடோனா மற்றும் பிரேசிலின் துங்கா.

இருவரும் தத்தமது அணியின் புகழ் பெற்ற கேப்டன்களாக இருந்தவர்கள். உலக அளவில் தமக்கென தனிப் பெரும் ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர்கள். இப்போது இருவரும் அவரவர் நாட்டு அணியின் பயிற்சியாளர்களாக உள்ளனர்.

இருவரும் தத்தமது அணிகள் கோப்பையை வெல்ல பல்வேறு உத்திகளை வகுத்து வருகின்றனர்.

பிரேசில் பயிற்சியாளரான துங்கா ஏற்கனவே பல முன்னணி வீரர்ளை அணியில் சேர்க்காமல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர். முன்னணி வீரர்களான ரொனால்டின்ஹோ, அலெக்சான்ட்ரி பாடோ, அட்ரியானோ ஆகியோரை அவர் சேர்க்காமல் விட்டதால் அவர்களின் ரசிகர்கள் பெரும் அதிருப்தியும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.

ரொன்ல்டின்ஹோ சேர்க்காமல் விடப்பட்டதை பிரேசில் அதிபர் லூசியோவே சுட்டிக்காட்டியுள்ளார். அவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் துங்கா என்று கருத்து தெரிவித்துள்ளார்.

இருப்பினும் Viagra online துங்காவின் கணக்கு தப்பாது, அவர் ஏதோ திட்டத்துடன் இருக்கிறார் என்று துங்காவை அறிந்தவர்கள் கருதுகிறார்கள்.

மறுபக்கம் அர்ஜென்டினாவின் முன்னணி வீரரான எஸ்டீபன் காம்பியாசாவை சேர்க்காமல் விட்டு மாரடோனாவும் அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார் அர்ஜென்டினா ரசிகர்களுக்கு. அதேபோல ஜேவியர் ஜெனட்டியும் சேர்க்கப்பவில்லை.

அர்ஜென்டினா அணியில் லியோனல் மெஸ்ஸியைப் போன்ற திறமையுடன் கூடிய வீரர்கள் நிறைய இல்லை என்றாலும் கூட கோப்பையை வெல்லும் திறமையுடன் கூடிய அணியைத்தான் மாரடோனா அறிவித்துள்ளதாக பேச்சு நிலவுகிறது.

துங்காவும், மாரடோனாவும் வகுத்துள்ள உத்திகள், அவர்களின் அணிகளுக்கு எந்த அளவுக்கு உதவப் போகிறது என்பதை போட்டிகளின் போதுதான் பார்க்க முடியும்.

Add Comment