ஷார்ஜாவில் தமிழக மார்க்க அறிஞருக்கு வரவேற்பு

ஷார்ஜா : அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வருகை புரிந்த முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி அல்ஹாஜ் எஸ். அஹமது பஷீர் சேட் ஆலிம் மன்பயீ அவர்களுக்கு 07.01.2011 வெள்ளிக்கிழமை காலை ஷார்ஜா விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இவ்வரவேற்பு நிகழ்வில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொதுச்செயலாளர் முதுவை ஹிதாயத், பொருளாளர் ஏ. ஜஹாங்கீர், துணைப் பொதுச் செயலாளர் ஏ. அஹ்மத் இம்தாதுல்லாஹ், தேரிருவேலி முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகிகள் மௌலவி அலி பாதுஷா மன்பயீ, மௌலவி Buy cheap Lasix சாதிக் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மௌலவி பஷீர் சேட் ஆலிம் அவர்கள் சுமார் மூன்று வார காலம் அமீரகத்தில் பல்வேறு சமுதாய மற்றும் மார்க்க நிகழ்வில் பங்கேற்க இருக்கிறார்கள். மேலதிக விபரங்களுக்கு 050 51 96 433 எனும் அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.

Add Comment