50 பைசாவுக்கு குறைவான காசுகள் செல்லாது

50 பைசாவுக்கு குறைவான காசுகள் செல்லாது

Buy Lasix style=”text-align: justify;”>25 பைசா
25 பைசா

இந்தியாவில் எதிர்வரும் ஜுன் மாதம் 30 ஆம் தேதி முதல் குறைந்தபட்ச நாணயம் என்பது ஐம்பது பைசாவாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜுன் மாதம் 30 ஆம் தேதி முதல் 50 பைசா நாணயத்துக்கு குறைவான 25 பைசா போன்ற நாணயங்கள் செல்லாது என அறிவித்துள்ளது.

வர்த்தகம்,வியாபாரம், பொருட்களின் விலை போன்றவற்றிலும் கூட தொகையானது அருகில் உள்ள ஐம்பது பைசாவுக்கு நேர் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே உள்ள 50 பைசாவுக்கு குறைவான நாணயங்களை திரும்ப பெறுவது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி விரைவில் தனியே அறிக்கை வெளியிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Add Comment