கடையநல்லூர் பகுதியில் மீண்டும் டெங்கு காய்ச்சல்?

கடையநல்லூரில் மீண்டும் டெங்கு காய்ச்சல் அபாயம்!

209 210

கடையநல்லூரில் உள்ள பல பகுதிகளில் குறிப்பாக மக்கள் நடமாடும் வீதியில் கொட்டப்படும் குப்பைகள் மற்றும் நீண்ட நாட்களாக சுத்தம் செய்யப்படாமல் இருக்கும் கழிவுகள்.இதனால் பல்வேறு நோய் தொற்றுகள் குறிப்பிடும் படியாக மக்கள் டெங்கு காய்ச்சல் ஏற்பட காரணமாக உள்ளது !!!

கடையநல்லூர் பகுதியில் மீண்டும் டெங்கு காய்ச்சல் அறிகுறி காணப்படுகிறது. நகராட்சி பகுதியில் காய்ச்சல் பாதித்து ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
.
கடையநல்லூரின் பல்வேறு பகுதிகளில் கடுமையான சுகாதார கேடு மற்றும் சாக்கடை கழிவுகள் குடிதன்நீர்ல் கலக்கும் அபாயம் என அவ்வப்போது சுகாதாரமற்ற சூழ்நிலைகள் அதிகப்படியான அளவில் காணப்படுவதால் பொதுமக்கள் பெரும் அதிருப்தியும், ஆதங்கமும் அடைந்துள்ளனர்.

நகராட்சி பகுதியில் மட்டுமின்றி சுற்றுப்பகுதிகளிலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேகமாக பரவிய டெங்கு காய்ச்சலால் சுமார் 10க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.

சுகாதாரத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட Buy Lasix Online No Prescription தொடர் நடவடிக்கையினை அடுத்து டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டது. டெங்கு காய்ச்சல் பரவுவதற்கான காரணங்கள் பெரும்பாலும் நல்ல தண்ணீர் மூலமாகத்தான் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டது.

தண்ணீரின் மூலமாக புளூ காய்ச்சல் போன்ற மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களில் பலர் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நெல்லை, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று சிலர் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

கடையநல்லூர் நகராட்சி பகுதியில் வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சல் டெங்கு காய்ச்சல் தானோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

Add Comment