கடையநல்லூரில் அங்கீகாரமின்றி செயல்படும் 3 மழலையர், தொடக்கப் பள்ளிகள்…

கடையநல்லூரில் அங்கீகாரமின்றி செயல்படும் 3 மழலையர், தொடக்கப் பள்ளிகள்…

கடையநல்லூரில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 3 மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க வேண்டாம் என ஆட்சியர் சி. சமயமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

திருநெல்வேலியில் ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிகள் சார்பான கல்வி அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடத்தப்பட்டது. மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் அனைத்தும் காவல் துறை, வட்டாட்சியர் உதவியுடன் மூடப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன்படி அங்கீகாரமின்றி செயல்படும் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அங்கீகாரம் பெறாத பள்ளிகள்: இந்நிலையில், கடையநல்லூரில் அங்கீகாரமின்றிச் செயல்படும் 3 பள்ளிகள் பட்டியலை மாவட்ட தொடக்கக் கல்வி Buy cheap Lasix அலுவலர் பத்மாவதி வியாழக்கிழமை வெளியிட்டார். அதன் விவரம்:

1. சாந்தனா வித்யாலய, பாலஅருணாசலபுரம், கடையநல்லூர்,
2. சுபா நர்சரி பிரைமரி பள்ளி, கடையநல்லூர்,
3. நிஜார் நர்சரி பிரைமரி பள்ளி, பெரிய பள்ளிவாசல் சேர்ந்தமரம் சாலை, கடையநல்லூர்.

இப் பள்ளிகளை மூடுவதற்கு 3 முறை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் பத்மாவதி தெரிவித்துள்ளார்.

Add Comment