நாகர்கோவிலில் அஸ்ஸாம் வாலிபர் கொலை-ஒருவர் கைது

நாகர்கோவில் அருகே கல்லூரியில் அஸ்ஸாம் தொழிலாளி கொலை செய்யப்பட்டார்.

நாகர்கோவில் அருகே ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணியில் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கல்லூரி வாளகத்தை ஓட்டி உள்ள பகுதிகளிலேயே தொழிலாளர்கள் தங்குவதற்கு செட் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு மு்ன் இந்த பணியில் ஈடுபட்டுள்ள அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த ராகேஷ், அர்ஜூன் ஆகிய இரு தொழிலாளிகள் இடையே தகராறு ஏற்பட்டது.

மற்ற தொழிலாளர்கள் இருவரையும் சமாதானம் செய்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை அர்ஜூன் சமையல் செய்யும் பணியில் இருந்தார். அப்போது வெளியே சென்றிருந்த ராகேஷ் வந்தார். தனியாக இருந்த இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இந்த தகராறில் ராகேஷை கீழே தள்ளிய அர்ஜூன் அருகில் கிடந்த கல்லை தூக்கி தலையில் போட்டு அவரை கொலை செய்தார். பின்னர் வெளியே தெரியாமல் இருக்க ஓலை செட் அருகில் உள்ள கிணற்றில் உடலை வீசியுள்ளார்.

ரத்த கறை தெரியாமல் இருக்க அந்த இடத்தை தண்ணீரால் கழுவினார். வேலை முடிந்து அனைவரும் buy Bactrim online மாலையில் ஓய்வறைக்கு திரும்பினர். அப்போது ராகேஷ் குறித்து அர்ஜூனிடம் கேட்டனர். அவர் முன்னுக்கு பின் முரணான பதில் கூறினார். இதற்கிடையே ஆங்கங்கே ரத்த கறைகள் இருந்ததை மற்ற தொழிலாளர்கள் பார்த்தனர்.
இதனால் விபரீதம் நடந்துள்ளதை புரிந்து கொண்டவர்கள் இதுகுறித்து உடனடியாக இரணியல் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

டிஎஸ்பி செல்வராஜ், இன்ஸ்பெக்டர் அதிவீராபண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அர்ச்சுனனை பிடித்து விசாரித்தபோது ராகேஷை கொலை செய்து கிணற்றில் வீசியது தெரிய வந்தது. இதையடுத்து கிணற்றில் இருந்த தண்ணீரை வெளியேற்றி நேற்று இரவு ராகேஷின் உடலை தீயணைப்பு படையினர் வெளியே எடுத்தனர்.

பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து அர்ஜூனை போலீசார் கைது செய்தனர்.

Add Comment