கடையநல்லூர் அருகே விவசாயத்துக்காக அரசு வழங்கிய ரூ.3 கோடி இலவச நிலம் விதி மீறி விற்பனை…

கடையநல்லூர் அருகே விவசாயத்துக்காக அரசு வழங்கிய ரூ.3 கோடி இலவச நிலம் விதி மீறி விற்பனை…

திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் அருகே அரசு வழங்கிய விவசாய நிலங்கள், முறைகேடாக வீட்டுமனைக்காக விற்பனை செய்யப்பட்டுள்ளது தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

கடையநல்லூர் அருகேயுள்ள போகநல்லூர் பகுதியில் சுமார் 32.88 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை 2002 மற்றும் 2004-ஆம் ஆண்டில் போகநல்லூர், சுந்தரேசபுரம், சங்கனாப்பேரி உள்ளிட்ட பகுதியிலுள்ள சுமார் 40 பேருக்கு விவசாயம் செய்யும் வகையில் அரசு இலவசமாகப் பட்டா போட்டு வழங்கியது.

இந்த நிலங்களை சுமார் 10 ஆண்டுகள்வரை யாருக்கும் விற்பனை செய்யக் கூடாது; அப்படி விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், முறையாக வருவாய் கோட்டாட்சியரிடம் அனுமதி பெற்று விற்பனை செய்ய வேண்டும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், விவசாயம் செய்வதற்காக அரசு பட்டா வழங்கிய 32.88 ஏக்கர் (புல எண்-454, 455, 456, 457, 458) நிலத்தில் பெரும்பகுதியை முறைகேடாக சிலர், ராஜபாளையத்தைச் சேர்ந்த ஜெகவீரபாண்டியன் என்பவரிடம் 2009, 2010 மற்றும் 2011-ஆம் ஆண்டில் விற்பனை செய்துள்ளனர்.

தொடர்ந்து அந்த இடம் வீட்டுமனையாக மாற்றம் செய்யப்பட்டு, தவணை முறையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதில் சில நூறு பேர் மனைக்காக பணம் கட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, விவசாயத்துக்காக அரசு வழங்கிய நிலம் முறைகேடாக விற்பனை செய்யப்பட்டுள்ளது தொடர்பாக விவசாயிகள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடையநல்லூர் வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணியன் மேற்கொண்ட விசாரணையில், இந்த விவசாய நிலங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது தெரியவந்தது.

இதையடுத்து, சார்-பதிவாளர் அலுவலகம் மூலம் நில விற்பனைப் பதிவு ஆவணங்களை திரட்டி வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு, வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணியன் அறிக்கை அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தென்காசி வருவாய் கோட்டாட்சியர் ரமேஷ், வியாழக்கிழமை அந்த நிலங்களை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

வருவாய்த் துறை அதிகாரிகள் அதிர்ச்சி: 10 ஆண்டுகள்வரை விற்பனை செய்யக் கூடாது என விதிகள் இருந்தும், வருவாய் கோட்டாட்சியரின் அனுமதி இன்றி விவசாய நிலங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது வருவாய்த் துறை அதிகாரிகள், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Buy Lasix style=”text-align: justify;”>இது தொடர்பாக கடையநல்லூர் ஒன்றியக் குழு உறுப்பினர் பிரகாஷ் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Add Comment