குற்றாலம் அருவிகளில் வெள்ளம் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

1011688_472218762863518_1927000118_n

குற்றாலத்தில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. குற்றாலத்தில் கடந்த மாத இறுதியில் சீசன் துவங்கியது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக அருவிகளுக்கு வரும் தண்ணீர் அளவு அதிகரித்த வண்ணம் உள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் அருவிகளில் தொடர்ந்து தண்ணீர் அதிகரித்து வருகிறது. குற்றாலம் அருவிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக குளிப்பதற்கு அவ்வப்போது தடை விதிக்கப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு தொடர்மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து குளிக்க தடை விதிக்கப்பட்டது. நேற்று காலையில் வெள்ளப்பெருக்கு தொடர்ந்து. காலை 8 மணிக்கு தண்ணீர் லேசாக குறைந்த நிலையில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் அருவிகளிலும் தண்ணீரின் வரத்து அதிகரித்தது. இதனை தொடர்ந்து மதியம் 1 மணிக்கு மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த தடை தொடர்ந்து நீடிக்கிறது. ஐந்தருவியிலும், பழைய குற்றாலத்திலும் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

தொடர்ந்து மலைப்பகுதியில் சாரல்மழை வலுத்து வருவதால் அனைத்து அருவிகளுக்கும் வரக்கூடிய தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்ககூடுமென எதிர்பார்க்கப்படுகிறது. விடுமுறை தினமான நேற்று குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

Bactrim No Prescription justify;”>அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால், சுற்றுலா பயணிகள் கடும் ஏமாற்றம் அடைந்தனர். அவ்வப்போது புலியருவியில் குளிக்க போலீசார் அனுமதித்ததால் அதில் சுற்றுலா பயணிகள் குளித்த மகிழ்ந்தனர். சுற்றுலாப் பயணிகள் கூட்டம் காரணமாக நேற்று குற்றாலம் பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

Add Comment