கங்குலி எனது சகோதரர் *ஷாருக் கான் மீண்டும் சமாதானம்

கங்குலி எனது சகோதரர் போன்றவர். அவரை அணியில் எடுக்காதது எனது முடிவல்ல,” என்று, கோல்கட்டா அணியின் உரிமையாளர், பாலிவுட் நடிகர் ஷாருக் கான் தெரிவித்துள்ளார்.
கடந்த 3 ஐ.பி.எல்., தொடரில் கோல்கட்டா அணியில் விளையாடியவர் கங்குலி. முதல் மற்றும் மூன்றாவது தொடரில் கேப்டனாக செயல்பட்டார். இம்முறை, நான்காவது தொடருக்கான ஏலத்தில், கங்குலியை யாரும் வாங்க முன்வரவில்லை. இது கோல்கட்டா ரசிகர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கோல்கட்டா அணியில் கங்குலிக்கு தகுந்த இடம் தரப்படும் என்று ஷாருக்கான் கூறினார். தற்போது, கங்குலி தேர்வு செய்யப்படாததற்கும் தனக்கும் தொடர்பில்லை என்கிறார். இதுகுறித்து ஷாருக்கான் கூறியது:
கடந்த மூன்று தொடர்களில் கோல்கட்டா அணி சிறப்பாக செயல்படவில்லை. இதனால் அடுத்த தொடரில் அசத்த வேண்டிய கட்டாயத்தில் கோல்கட்டா அணி உள்ளது. முதல் தொடரில் நான் எடுத்த முடிவுகள் வெற்றி பெறவில்லை. இதனால் முடிவெடுப்பதில் இருந்து விலகிவிட்டேன்.
அணி குறித்த முடிவுகளை, கிரிக்கெட்டில் அனுபவம் வாய்ந்தவர்கள் எடுத்தனர். ஒரு சில முடிவுகளை எடுக்க, கடினமான இதயம் இருக்க வேண்டும். கடந்த 3 தொடர்களில் சிறப்பாக விளையாடிய கங்குலியை தேர்வு செய்யாதது எனது முடிவல்ல.
கோல்கட்டா அணி ஒரு சிலரை மட்டும் உரிமையாளராக கொண்டிருக்கவில்லை. இது 20 பேர்கள் அடங்கிய குழுவாக செயல்படுகிறது. இவர்கள் தான் காம்பிரை ரூ. 11.04 கோடிக்கு ஏலம் எடுத்தனர். கங்குலி எனது சகோதரர் போன்றவர். அவரை அணியில் இருந்து இழந்தது மிகவும் வருத்தமாக உள்ளது.
எங்களைப் பொறுத்தவரையில் கோல்கட்டா அணி சாம்பியன் பட்டம் வெல்லவேண்டும் என்று தான் Buy cheap Ampicillin விரும்புகிறோம். கங்குலியும் இதைத்தான் விரும்புவார். இது போன்ற மிகப்பெரிய இலக்கை அடையும் போது சில, ஒருசிலவற்றை தியாகம் செய்து, சோகமான முடிவுகளை எதிர்கொள்ளத் தான் வேண்டியது இருக்கும்.
முதல் தொடரில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டன. மூன்றாவது தொடரின் போது பல சிக்கல்கள் வந்தது. நான் உங்களிடம் கேட்டுக்கொள்வதெல்லாம், இம்முறையாவது கோல்கட்டா அணியை, எந்த பிரச்னையும் இல்லாமல் போட்டிகளில் பங்கேற்க அனுமதியுங்கள் என்பது தான்.
இவ்வாறு ஷாருக் கான் கூறினார்.

Add Comment