இங்கிலாந்து “திரில்’ வெற்றி *ஆஸி., ஏமாற்றம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது “டுவென்டி-20′ போட்டியில், ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி திரில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி, 2 போட்டிகள் கொண்ட “டுவென்டி-20′ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி அடிலெய்டில் நேற்று நடந்தது. “டாஸ்’ வென்ற buy Levitra online ஆஸ்திரேலிய கேப்டன் கேமிரான் ஒயிட், பேட்டிங் தேர்வு செய்தார்.
வாட்சன் அதிரடி:
முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு ஷேன் வாட்சன், டேவிட் வார்னர் ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. இங்கிலாந்து பந்துவீச்சை பதம்பார்த்த வாட்சன், 27 பந்தில் அரைசதம் கடந்தார். அதிரடியாக ஆடிய இவர், 31 பந்தில் 59 ரன்கள் (3 சிக்சர், 6 பவுண்டரி) எடுத்து அவுட்டானார். அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய வார்னர் 30 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் ஒயிட் (6) ஏமாற்றினார். பின்னர் டேவிட் ஹசி (28), ஆரான் பின்ச் (15*), ஸ்டீவன் ஸ்மித் (15*) கைகொடுக்க, ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து சார்பில் மைக்கேல் யார்டி 2 விக்கெட் வீழ்த்தினார்.
மார்கன் அபாரம்:
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு ஸ்டீவ் டேவிஸ் (4) மோசமான துவக்கம் கொடுத்தார். அதிரடியாக ஆடிய இயான் பெல் (27), கெவின் பீட்டர்சன் (25) நிலைக்கவில்லை. அடுத்து வந்த கேப்டன் கோலிங்வுட் (16) ஏமாற்றினார். அபாரமாக ஆடிய மார்கன் 33 பந்தில் 43 ரன்கள் (ஒரு சிக்சர், 5 பவுண்டரி) எடுத்து நம்பிக்கை அளித்தார். இங்கிலாந்து அணி 19 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்திருந்தது.
திரில் வெற்றி:
இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 4 ரன்கள் தேவைப்பட்டது. வாட்சன் வீசிய 20வது ஒவரின் முதல் பந்தில் சுவான் (6) அவுட்டானார். அடுத்த இரண்டு பந்தை ஷேக்ஷாத் வீணடித்தார். இதனால் 3 பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்டது. நான்காவது பந்தில் ஷேக்ஷாத் ஒரு ரன் எடுக்க, 5வது பந்தில் ஓயக்ஸ் 2 ரன்கள் எடுத்தார். இதனால் கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப்பட்டது. ஆறாவது பந்தில் ஓயக்ஸ் ஒரு ரன் எடுக்க இங்கிலாந்து அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா சார்பில் 4 விக்கெட் வீழ்த்திய வாட்சன், ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இதன்மூலம் இங்கிலாந்து அணி 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது போட்டி நாளை மெல்போர்னில் நடக்கிறது.

8வது வெற்றி
ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இங்கிலாந்து அணி, “டுவென்டி-20′ அரங்கில் தொடர்ந்து 8வது வெற்றியை பதிவு செய்து புதிய வரலாறு படைத்தது. இதன்மூலம் “டுவென்டி-20′ அரங்கில், தொடர்ந்து அதிக வெற்றிகளை குவித்த அணிகள் வரிசையில் முதலிடம் பிடித்தது. தலா 7 வெற்றிகளை பெற்றுள்ள தென் ஆப்ரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் 2வது இடத்தில் உள்ளன.

Add Comment