கடையநல்லூர் வாசிகளின் கவனத்திற்கு…

அன்புள்ளம்கொண்ட kadayanallur.org ன்  மதிப்பு மிக்க வாசகப் பெருமக்களே  !

 அனைவருக்கும் எங்களின் ரமழான் நல்வாழ்த்துக்கள் !
Ampicillin online justify;”>எங்கள் வலைத்தளத்திக்கு நீங்கள் காட்டிவரும் ஆதரவு மகத்தானது . அதற்காக மிக்க நன்றி !
நமதூரைப் பற்றிய  செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்வதற்கு இத் தளம் மிகவும் உபயோகமாக இருக்கிற து என்று பலரும் பாராட்டி வருகின்றனர் காய்தல் உவத்தல் இன்றி அனைத்துச் செய்திகளையும் நடு  நிலையோடு நாங்கள் வெளியிட்டு வருகிறோம். நாங்கள் எந்தக் கட்சியையோ குழுக்களையோ பிரிவுகளை யோ சார்ந்து ஒருபோதும் செய்திகளைத் தருவதில்லை எனபது நீங்கள் அறிந்த விஷயம்.
நமதூரில் சமீப காலமாகப் பெருகிவரும் அனாச்சாரத்தை பேர் சொல்லிப் பிரகடன ப் படுத்தாமல்  குறிப்பால் உணர்த்தி சொல்ல நினைக்கிறோம். கேள்விப் படுகிறோமே உண்மையா ? என்ற தலைப்பில் ஒரு புதிய பகுதியை ஆரம்பிக்க இருக்கிறோம். இந்தப் பகுதிக்கு செய்திகளை அனுப்புவோர் தங்களின் பெயர், குடும்பத்தின் பெயர் முகவரி மற்றும் கை பேசி எண்  ஆகிய விபரங்களுடன் தகவல்களைத் தரலாம் . அந்தச் செய்திகளின் உண்மைத் தன்மைகளை ஆராய்ந்து உறுதி செய்த பிறகு பெயர் விபரங்கள் இல்லாமல் குறிப்பாக  விளங்கும் வகையில் மறை பொருளில் செய்திகள்  வெளியிடப் படும். தகவல் தந்தவரின் பெயரோ முகவரியோ வெளியிடப்பட மாட்டாது.
இப் புதிய பகுதியை ஆரம்பிப்பது குறித்து முதலில் உங்களின் கருத்துக்களை அறிய விரும்புகிறோம் பெரும்பாலான வர்கள் விருப்பப்பட்டால் தொடங்குவோம்.(இன்ஷா அல்லாஹ்)
என்ன கருத்துக் கணிப்புக்கு நீங்கள் தயாரா ?இதோ உங்களின் கருத்துக்களை “மக்கள் கருத்துக்கள்” பகுதியில் தெரியபடுத்துங்கள்.
எழுங்கள் . எழுதுங்கள். சமுதாயக் குப்பைகளைத் துப்புரவு செய்ய வாருங்கள் !

Add Comment