பிறை நிலாக் காலம்-பிறை 4(வி.எஸ்.முஹம்மது அமீன்)

பிறை நிலாக் காலம்

வி.எஸ்.முஹம்மது அமீன்

பிறை 4

வீதியில் நடப்பவரிடம் “ நீங்கள் எங்கே செல்கின்றீர்கள்?” என்ற கேள்வியை எழுப்பிப்பாருங்கள். தனது நடையின் நோக்கத்தைப் பதிலாய்த் தருவார்.

வீதியில் ஒரு எட்டு நடைபோடுபவருக்கே நோக்கமொன்று இருக்கிறதென்றால் மாதம் முழுவதும் பசித்திருப்பதற்கு நோக்கம் இல்லாதிருக்குமா?

ஆண்டவனின் கட்டளை அர்த்தமற்றதாக இருக்குமா என்ன?

நோன்பிற்கு நோக்கம் இருக்கிறது.அது உன்னதமான நோக்கம்.

நோன்பு மட்டுமல்ல இஸ்லாத்தின் கடமைகள் ஒவ்வொன்றும் ஓர் உயரிய நோக்கத்தை முன்வைத்துள்ளது.

தொழுகை, ஜக்காத், நோன்பு,ஹஜ் அனைத்தும் வேண்டி நிற்கும் நோக்கம் என்ன தெரியுமா?

இறையச்சம். நற்குணமுள்ள மனிதர்கள். இறையச்சமுள்ள சமுதாயம்.

தொழுகை எப்படிப்பட்ட மனிதர்களை உருவாக்கவிரும்புகிறது தெரியுமா?

இறைவன் குறிப்பிட்டுக்காட்டுகிறான்

“ திண்ணமாக, தொழுகை மானக்கேடான மற்றும் தீய செயல்களைத் தடுக்கின்றது”

-திருக்குர்ஆன் 29:45

ஜக்காத் மனிதர்களிடம் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறது தெரியுமா?

இறைவன் கட்டளையிடுகின்றான்.

“(நபியே!)அவர்களுடைய பொருள்களிலிருந்து தானத்தை வசூல் செய்து கொண்டு அதன்மூலம் அவர்களைத் தூய்மையாக்குவீராக!(நல் வழியில்) அவர்களை முன்னேறச் செய்வீராக!”-

திருக்குர்ஆன் 9:102

ஹஜ் என்ற கடமை ஏற்படுத்த விரும்பும் மாற்றம் என்ன என்பதை இறைவன் இவ்வாறு குறிப்பிடுகின்றான்

“ நீங்கள் (ஹஜ்ஜுக்காக) வழித்துணைச் சாதனங்களைக் கொண்டு செல்லுங்கள்.உண்மை யாதெனில், வழித்துணைச் சாதனங்களில் எல்லாம் மிக மேலானது இறையச்சம்தான்”

– திருக்குர்ஆன் 2:197

ஹஜ்ஜின்போது பிராணிகளை அறுத்துப் பலியிடுவது கூட ஓர் ஒப்பற்ற நோக்கத்தையே வேண்டி நிற்கிறது.

இறைவன் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்.

“…… இப் பிராணிகளை நாம் உங்களுக்கு வசப்படுத்தித் தந்துள்ளோம். நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு! அவற்றின் இறைச்சியும் இரத்தமும் அல்லாஹ்வைப் போய்ச் சேருவதில்லை.ஆயினும் உங்களின் இறையச்சமே அவனிடம் போய்ச் சேருகிறது”

Buy Ampicillin justify;”>- திருக்குர்ஆன் 22:37

இப்போது நோன்பிற்கு வருவோம். நோன்பின் நோக்கம் எதுவென இறைவன் தெளிவாய்க் குறிப்பிடுகின்றான்.

“இறைநம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் இருந்த ( நபிமார்களைப் பின்பற்றிய)வர்கள் மீது கடமையாக்கப்பட்டது போல், உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கிறது.(அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுள்ளவர்களாய்த் திகழக்கூடும்.

– திருக்குர்ஆன் 2:183

நோன்பின் நோக்கம் இறையச்சம் சரிதான்.ஆனால் பட்டினி கிடந்தால் இறையச்சம் எப்படி வருமாம்?

நாளைய பிறை நமக்காய் காத்துக்கிடக்கிறது.

(பிறை வளரும்)

நன்றி:தின இதழ்

Add Comment