நாம என்ன பண்ணலாம்……?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…!

எனது நண்பர் ஒருவரிடமிருந்து வந்த மடல்! இந்த மடலை நாம் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய ஒன்று எனக்கருதி வெளியிடுகிறேன்!

அல்லாஹ் நம் அனைவருக்கும் அவனுடைய அருளை வாரி வழங்குவானாக…!

என் இனிய தோழர்களே!

எந்த ஒரு தனி மனிதனின் மேடைப்பேச்சு மட்டுமே எதையும் சாதித்துவிட இயலாது என்ற விஷமத்தனமான, விவேகமற்ற பிரச்சாரத்தை சிலர் வேகமாக செய்கின்றனர். இவர்கள் வரலாறு தெரியாத வடிகட்டிய முட்டாள்கள். ஏனென்றால்,

கியூபா விடுதலைக்கு குரல் தந்து விதை நட்டவன் ஃபிடல்காஸ்ரோ, லிபியா விடுதலைக்கு வித்திட்ட உமர்முக்தார், தென் ஆப்ரிக்கவிடுதலைக்கு தனிமனிதனாய் தனித்து நின்ற நெல்சன் மண்டேலா, சிங்கப்பூர் விடுதலைக்கு வித்திட்ட லீ குவான்யூ, இந்தோனேசியா சுகர்னோ, மலேசியா சுகர்த்தோ, அமெரிக்க லிங்கன் – பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்துக்கு இந்திய மண்ணில் முதல் விதை நட்ட ராபர்ட் கிளைவ், பிரஞ்சுப் புரட்சிக்கு துள்ளி எழுந்த நெப்போலியன் ஸ்டாலின், முஸோலினி சர்ச்சில், மார்டின் லூதர்கிங், கன்பியூசியஸ், சீஸர்,ஆண்டனி, அலெக்ஸாண்டர், சாக்ரட்டீஸ், பித்தகோரஸ், செகுவாரா, மாசெதுங், மகாத்மா காந்தி, முகம்மது அலி ஜின்னா, பர்மாவின் ஆங் சாங் சூக்கி, நமது பெருமானார் (ஸல்) அவர்களும், ஏசுநாதரும், புத்தரும் தனிமனிதனாகவே துவங்கிய இயக்கங்களால்தான் உலகளாவிய இயக்கத்தை தோற்றுவிக்க முடிந்தது.

சிறு விதையினுள் பெரும் விருச்சகமே உள்ளது என்ற எதார்த்தத்தை உணராத மடையர்களின் வாதங்களை உதறி எரிந்து நடக்க கற்றுக் கொள்ளுங்கள்.

இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின் போது முகம்மது அலி ஜின்னா பிரிவினையின் பக்கமும் ஏனைய முஸ்லீம் தலைவர்கள் இந்திய தேசிய காங்கிரஸின் பக்கமும் நின்றார்கள். ஜின்னா தனிமனிதனாய் நின்றார் வென்றார். ஆனால் அபுல்கலாம் ஆஸாத், ஜாகிர் ஹுசைன்,பக்ருதீன் அலி அஹமதுவும் இன்னும் பல தலைவர்களும் கூட்டாய் நின்று காங்கிரஸோடு கூடி நின்றனர்.என்றாலும், இவர்கள் காங்கிரஸில் இருந்து முஸ்லிம் மக்களுக்கு என்ன நன்மையை செய்தார்கள்? எதுவும் இல்லை.

இந்தியாவில் அன்றைய முஸ்லீம் ஜனத்தொகை 21 கோடி – அதில் சுமார் பதினோரு கோடி முஸ்லிம்கள் தான்.அதிலும் குறிப்பாக மேற்கு பகுதியில் வசிப்பவர்கள் முகமது அலி ஜின்னா பக்கம் நின்றார்கள். பாகிஸ்தான் என்ற நாடு உதயமானது.அவர்கள் தங்களது ஜீவாதார உரிமையுடன் வாழ்கிறார்கள்.. அவர்களுக்கு மதச்சுதந்திரம் முழுமையாக உள்ளது. அதே சமயம் இந்திய யூனியன் பகுதியில் மிஞ்சிய10கோடி முஸ்லிம்கள் காங்கிரஸாருடன் கை கோர்த்திருந்தனர். என்றாலும், இன்றுவரை நமது உரிமைகள் காக்கப்படவில்லை மாறாக,நாம் படிப்படியாய் நசுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டு மிரட்டப்பட்டு, கொல்லப்பட்டு, மூன்றாத்தாரக் குடிமக்களாக நடத்தப்படுகிறோம். மதசார்பின்மை என்பது காற்றில் பறந்த கதையாகிவிட்டது!

ஒரே ஒரு அம்பேத்கார் தமது தாழ்த்தப்பட்ட 9 கோடி மக்களுக்கு 140 பாராளுமன்ற ரிஸர்வு தனித்தொகுதிகள் பெற்றுத் தந்தார். ஆனால் பல முஸ்லீம் தலைவர்கள் ஒன்று கூடி நின்றும் ஒரு சீட்டு கூட பெற முடியாமல் முடிவில் மனவருத்தத்துடன் மரணமடைந்தனர். சில தலைவர்கள் தாங்கள் வஞ்சிக்கப்பட்டோம் என்று கூட வெளியே சொல்ல முடியாமல் போனது. முடிவில் அபுல் கலாம் ஆஸாத் ஒரு நூல் எழுதி, அதை தான் மரணமடைந்து 30 ஆண்டுகளுக்கு பின் வெளியிடும் படி உயில் எழுதி ஒளித்து வைத்து விட்டு போன கதையும், ராஜீவ் அரசு அந்நூலை வெளியிடலாமா? வேண்டாமா? என்று பாராளுமன்ற சர்ச்சை மூலம் முடக்கிப் போட்டதை நாடறியும்!

நேருவுடன் கைகோர்த்து நின்ற ஷேக் அப்துல்லா மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது. அவரை காஷ்மீரில் சிறை வைக்காது கொடைக்கானலில் சிறைவைத்து, தங்கக் கூண்டில் தவிக்க வைத்தனர். ஹைதராபாத் நிஜாமும், ஆற்காடு நவாபும் ராணுவத்தால் பணிந்து குனிந்து போயினர். ராணுவங்களில் முஸ்லிம்களை சேர்க்காமல் திட்டமிட்டே ஆட்சியாளர்கள் சீக்கியர்களையும் கூர்க்காக்களையும் சேர்த்தனர். அதேபோல் கேரள முஸ்லீம்கள், மாப்பிள்ளைமார்கள், கலகக்காரர்கள் என்று சித்தரிக்கப்பட்டு ஒழிக்கப்பட்டனர். மராட்டிய முஸ்லீம்கள் சேரிகளில் குடிபுகுந்தனர். பீகாரிலும், உ.பி.யிலும், குஜராத்திலும் முஸ்லீம்கள் மீது கலவரபயத்தை ஏவிவிட்டு அவர்களையும் முடக்கிஒ போட்டனர். அன்று மிரண்ட முஸ்லீம்கள் (கேரளாவைத் தவிர) வேறு எங்கும் தலைதூக்காது இன்னும் கூனிக் குறுகி குனிந்து வாழ்கிறார்கள். இதுதான் முஸ்லிம்களின் இதுவரையான வாழ்க்கைச் சுருக்கம்……

முஸ்லிம்களின் இந்த நிலைமாற தீர்வுகள்தான் என்ன? முஸ்லிம்களை பீடித்துள்ள போலி பய உணர்விலிருந்து மீண்டுவரும் வழி எது?அவர்கள் இழந்த உரிமைகளை பெறுவது எப்படி? அதற்கானஒரே பதில் ” ஒன்றுபடுவோம் ஒதுங்கிக் கூடுவோம் ” பிற அரசியலை புறக்கணிப்போம் என்பதுதான்.

இந்தியாவெங்கும் 20 கோடி முஸ்லீம்கள் இருந்தும் பாராளுமன்றத்தில் என்றுமே 10 எம்.பி.களுக்கு மேல் போனதே கிடையாது. பஞ்சாயத்து தேர்தல்களில் கூட முஸ்லீம்கள் பெரும்பான்மையாய் உள்ள பகுதிகளை ரிஸர்வு (தனி)தொகுதியாக்கியும் பெண்கள் தொகுதியாக்கியும் திட்டமிட்டு முடக்கிப் போட்டார்கள். இந்தியாவில் சீக்கியர்கள் 2 கோடிக்கும் குறைவே ஆனாலும் 1985-ம் இந்திரா படுகொலைக்கு மறுநாள் டெல்லியில் நடந்த கலவரத்தில் 3000 பேருக்கும் மேல் சீக்கியர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு சீக்கிய அகாலிதள்கள் தொடர்ந்து போராடி நஷ்டஈடு பெற்றதுடன் வழக்கு மன்றம் மூலம் பி.சி.சுக்லா உள்பட பலரை கம்பி எண்ண வைத்தார்கள்.

ஆனால் பிவாண்டியில், மீரட்டிலும், பாகல்பூரிலும், பம்பாய், லக்னோ, டெல்லி, சூரத், சென்னை, கோவை போன்ற பல ஊர்களில் சங்பரிவார கயவாளிகளால் பல்லாயிரம் முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். பலமுறை கொள்ளையடிக்கப்பட்டனர். சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இன்றுவரை ஒருவனும் தண்டிக்கப்படவில்லை. ஒருவருக்கும் நஷ்ட ஈடு கிடைக்கவில்லை.. ஆனால், குற்றவாளிகளான அத்வானிகளும்,பால் தாக்ரேக்களும் தங்கத்தேர்களில் பவனி வருவதைத்தான் காண்கிறோம்!

இது கடந்த கால வரலாறு. ஆனால், இன்று மேற்ப்படி இனத்தைச் சேர்ந்த இவர்களெல்லாம் தேசபக்தர்களாகி விட்டார்கள். யாரையுமே கொல்லாத முஸ்லிம்கள் தேசவிரோதிகள் ஆக்கப்பட்டுள்ளோம். அவர்கள் உரிமைகளை கேட்கக்கூட முடியாத பாவிகளாக்கப்பட்டு உள்ளார்கள். இந்த அவலங்களை எழுதினால் ஏடுகள் பத்தாது. எனக்குள் ஒரு எரிமலையே புதைந்துள்ளது. சகோதரர்களே! நாமும் நமக்குறிய பங்கினைப் பெற வேண்டும் அதற்கு எந்தப் பாதை சிறந்தது முடிவானது உறுதியான இலக்குடையது. பலநாள் சிந்தித்தேன் – சிந்தித்தேன் – இரு வழிகள் தெரிந்தது.

1.அறவழி, 2.மறவழி

மறவழி என்பதன் முதன் பொருள் ஆயுத்மேந்துவது – இதைப் பற்றியும் சிந்தித்தேன் ஆனால் இந்திய சூழலில் அது ஒத்துவராது.சீக்கியர்களைவிட நவீன ஆயுதம் ஏந்திய எந்த அமைப்பும் ஆசியா கண்டத்தில் கிடையாது. அப்படிப்பட்ட சீக்கியர் போராட்டம் இன்று தோல்வி கண்டது. அரசியல் சூதாடிகளாலும் ஆள்காட்டி துரோகிகளாலும் சீக்கியர்களின் மறவழி போராட்டம் அது முடக்கப்பட்டு முனை மழுங்கிப் போய் இன்று பல்வேறு குழுக்களாய் இருந்த அகாலிகள் ஒன்று கூடி அறவழியில் நிற்கிறார்கள். அதே போன்று காஷ்மீர்போராளிகள் குழு சிதறடிக்கப்பட்டது.

போடோலாந்து, நாகாலாந்து, உல்பா போன்று எத்தனையோ ஆயுதப் போராட்டம் முனை மழுங்கியே போனது. மறவழிப் போராட்டத்தால் பல உயிர்கள் பலியானது தான் மிச்சம். இத்தகைய சூழ்நிலையில் மறவழிப் போராட்டத்தை நாம் மேற்கொள்வது பலன் தராது என்று எண்ணுகிறேன்.

மாறாக நமது உரிமைகளை பெற வேண்டுமென்றால் இந்திய அரசியல் நரிகளுக்கு சரியான தீர்வை நாம் சொல்ல வேண்டுமென்றால்,அவர்கள் பயப்படும் நமது ஜனத்தொகை விகிதாச்சாரத்தை நாம் சரியாக பயன்படுத்தியே தீர வேண்டும். நமது மக்கள் தொகையின் சதவீதத்திற்கு ஏற்ப பாராளுமன்றத்தில் நமக்குள்ள பங்கை நாம் பெற்றே ஆகவேண்டும்!

பால்தாக்ரே பல கொலைகளைச் செய்தவன் இருந்தும் மராட்டிகளின் ஜாதிய உணர்வை கட்டுக்குள் வைத்திருப்பதால் அவன் நினைத்ததைசாதிக்கிறான். சட்டம் அவன் கால்தூசியைக் கூட தொட நடுங்குகிறது. மராட்டிகளின் பால்தாக்ரேக்கு இருக்கும் உணர்வு பிகாரிலும்,உ.பி.யிலும் லல்லுபிரசாத் யாதவ் மற்றும் முலாயம் சிங் யாதவ் போன்ற யாதவர்களின் இன உணர்வு, கன்சிராமின் தாழ்த்த்ப்பட்டோர் உணர்வு, தேவகவுடாவின் கன்னட ராஜ்குமார் லிங்காயத்து ஜாதிக்குள்ள உணர்வு, கேரளாவில் ஈழுவர்களுக்கு உள்ள உணர்வு,ஆந்திராவில் கம்மவார் (என்.டி.ராமராவுக்கு) ஜாதிக்குள்ள உணர்வு, குஜராத் மார்வாடிக்குள்ள உணர்வு, பஞ்சாப் சீக்கியனுக்கு உள்ள உணர்வு, அஸ்ஸாம் கனபரீஷத்துகளுக்கு உள்ள உணர்வு, நாகலேண்ட் நாகாகளுக்கு உள்ள உணர்வு, மிஜோராமிலும் கோவாவிலும் கிருஸ்துவர்களுக்கு உள்ள உணர்வு, போடோக்குளுக்கு உள்ள உணர்வு, காஷ்மீர் பார்ப்பானிய பண்டிட்டுகளுக்கு உள்ள உணர்வு, வங்காளத்து வங்காளிகளுக்கு உள்ள உணர்வு இந்திய முஸ்லீம்களுக்கு மட்டும் இல்லாது போனது ஏன்? ஏன்? ஏன்? கொடுமைகளைச் சுமந்து குனிந்து வாழ வேண்டிய கட்டாயம் என்ன? சரியான தீர்வுகள் இல்லை. வழிகாட்ட ஆள் இல்லை!

இந்தியாவில் 30 மாநிலங்களில் மாநிலத்துக்கு 5 முஸ்லீம் எம்.பி.க்கள் என்றால் கூட 150 பேர் பாராளுமன்றத்தில் பங்கு வகிக்கலாமே இதை செய்ய முனைவது யார்? நாம்தான் வழிகாட்ட வேண்டும். தமிழகத்தில் சுமார் 60-க்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் (நாம்) 80,000-ம் மேற்பட்ட வாக்காளர்கள் (முஸ்லிம்கள்) உள்ளனர். நன்னிலம் (நாகை மாவட்டம்) தொகுதியில் 1,20,000 முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர்.

ஆனால், இதுவரை முஸ்லிம்கள் அங்கு சட்டமன்ற தொகுதிக்கு போட்டியிட்டதே இல்லை. இலட்சம் முஸ்லிம் வாக்காளர்கள் உள்ள தொகுதிகளில் நன்னிலம், கடலாடி, கோவை மேற்கு, மதுரை மத்திய பகுதி, திருச்சி 1, சேலம் 1, அரவாக்குறிச்சி, குடியாத்தம், புவனகிரி,ராணிப்பேட்டை, வாணியம்பாடி, பேரணான்பட்டு, வேலூர் 1, ஆற்காடு, சென்னை துறைமுகம், சேப்பாக்கம், ஆயிரம்விளக்கு, திருவல்லிக்கேணி,எழும்பூர், பூங்காநகர், ராயபுரம், திண்டுக்கல், நத்தம், பெரியகுளம், மேலப்பாளையம், கடையநல்லூர், காயல்பட்டிணம், இராமநாதபுரம் இப்படியாக 30 தொகுதிகள்இலட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் வாக்காளர்கள் கொண்ட தொகுதி. இது போன்று இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் சட்டமன்ற தொகுதிகளை கணக்கிட வேண்டும்.

மேற்கண்ட நம் கணக்கு வாக்காளர் பட்டியல் ஆதாரமான ஒன்று. இன்னும் பல ஆதாரங்களைக் தொகுத்து எடுத்து, அதை அந்தந்த 60தொகுதிகளில் வாழும் இஸ்லாமிய இல்லங்களுக்கு நூலாக்கி தரவேண்டும். buy Ampicillin online உதாரணமாக அறந்தாங்கி (புதுக்கோட்டை மாவட்டம்) தொகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக கள்ளர் இனத்தைச் சார்ந்த திருநாவுக்கரசு வெல்கிறார்.

அங்குள்ள கள்ளர்கள் மூன்றாவது சிறுபான்மையினர் 15,000-க்கும் குறைவாகவே உள்ளனர். ஆனால் அறந்தாங்கி தொகுதிக்குள் வரும் கோட்டைப்பட்டிணம், மிமிஸால், கோபாலபட்டிணம், அம்மாபட்டிணம், ஆவணம்கைகாட்டி, காசிம் புதுப்பேட்டை, அறந்தாங்கி உள்பட வாக்காளர் பட்டியலை எடுத்துப் பார்த்தால், முஸ்லிம் வாக்காளர்கள் கிட்டத்தட்ட 70,000 பேர் உள்ளனர். இப்படி அதிகபட்சமான வாக்காளர்கள் இருந்தும் அறந்தாங்கி தொகுதியில் இதுவரை ஏன்? ஒரு முஸ்லிம் வெற்றி பெற முடியவில்லை? வெற்றி பெறுவது ஒரு புறமிருக்கட்டும், ஏன் தேர்தலில் போட்டியிடவே தயக்கம்?

உண்மையான காரணம் முஸ்லிம்கள் அவ்வளவு பேர் அங்கு உள்ளோம் என்பதே நூற்றுக்கு இரண்டு முஸ்லிம்களுக்குக் கூடத் தெரியாது. நன்றாக திரையிடப்பட்டது தான் மூலக்காரணம்.அதே போல் கடலாடியில், கீழக்கரை, ஏர்வாடி, ஒப்பிலான், மாரியூர், கோரைக்குளம் போன்ற ஊர்களில் முஸ்லிம் வாக்காளர்கள் 82,617 பேர்கள். இங்கு ஏன் முஸ்லிம்கள் வென்று வாகைசூட முடியவில்லை? அதை ரிஸர்வு தொகுதியாக்கி நம்மையெல்லாம் ஏமாற்றி இளிச்சவாயய்களாக்கி விட்டார்கள். ரகுமான்கான் வென்ற ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் தேவிபட்டிணம், சித்தார்கோட்டை, அண்டகுளைம், பனக்குளம், சின்னக்கடை உட்பட ஏகமாய் 63,313 முஸ்லிம் வாக்காளர்கள்.

இளையான்குடியிலும் ஆர்.எஸ்.மங்கலம், திருப்பாலக்குடி, ஆனந்தூர் உட்பட 62,266 முஸ்லிம் வாக்காளர்கள் நாம் ஏன் வெற்றிபெற முடியவில்லை? இதை உணர்த்த ஆளில்லை. இதை உணர்த்துபவனை ஆதரிக்க ஆளில்லை அல்லது அனைத்து அரசியல் கட்சிகளும் விரும்புவது இல்லை. முஸ்லிம்களுக்கு 60 தொகுதி என்றால் 3-ல் இரண்டு பங்கு மெஜாரிடிகளை தனிக்கட்சி பெறமுடியாது. எந்த மசோதாவும் சட்டமாகாது!

மேலும் 30 தொகுதிகளில் எண்பதாயிரத்துக்கும் உட்பட்ட முஸ்லிம் வாக்காளர்கள் கொண்ட தொகுதிகள் அறுபதாயிரம் வாக்காளர் கொண்ட23 தொகுதிகள் இறுக்கிப் பிடித்தால் நமக்கு நாமே ஒன்றாய் ஒரு முகமாய் கூடி நின்று வாக்களித்தால் சுமார் நூறு சட்டமன்ற தொகுதிகளை பெறலாம். எந்த அரசியல் கட்சியின் காலடியில் விழாது, பல்லாக்கு தூக்காது, பல்லவி பாடாது, பல்லிளிக்காது எளிதில் வெற்றி பெறலாம்.

முஸ்லிம்களால் நூறு தொகுதிகளை பெறமுடியும் என்பதை காட்டிவிட்டால் எல்லா அரசியல் இயக்கங்களும் உங்கள் காலடியை கழுவி நிற்பர். கையில் வெண்னையை வைத்துக் கொண்டு நெய்க்கு அழுது கொண்டே அலைந்து அழுகிப் போகும் கூட்டமாய் நாமிருக்க வேண்டுமா? சுமார் 10 பாராளுமன்றத் தொகுதிகளை வெல்வதோடு 16 தொகுதி எம்.பி.க்களின் வெற்றியை நிர்மானிக்கும் வலுவுள்ளவர்கள் நாம். தமிழகத்திலுள்ள 6 மேயர்களும் முஸ்லிம்களாகவே இருக்க முடியும்!

ஒரு மேயர் சென்னை தவிர ஏனைய தொகுதிகளில் வெற்றிபெற ஒன்றரை இலட்சம் வாக்காளர்கள் வாக்கு போட்டால் போதும். ஆனால்,மதுரையில் மூன்று இலட்சம் முஸ்லிம் வாக்காளர்கள் மாநகர வாக்காளர் பட்டியலில் உள்ளனர். நெல்லை 2.5 இலட்சம் வாக்காளர்கள். திருச்சியில் மூன்று இலட்சம் வாக்காளர்கள். சேலம் 2.5 இலட்சம் வாக்காளர்கள். சென்னையில் முஸ்லிம் வாக்காளர்கள் 20 இலட்சம் பேர். ஆனால், ஸ்டாலின் வென்றது 13 இலட்சம் வாக்குகளில், சென்னை மெட்ரோ நகரில் 186 மசூதிகளும் ஒன்றாய்கூடி ஒரு முஸ்லிமை மேயராக நிறுத்தி, கூட்டாக வாக்களித்திருந்தாலே சுமார் 18 இலட்சம் இஸ்லாமிய வாக்காளர்கள் வாக்களித்து இருந்தாலே அந்த இஸ்லாமிய மேயர் வென்றிருப்பார். அதற்கொன்றும் மலையை தோண்டி எலியை பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஐக்கிய ஜமாத் ஏற்படுத்தி கூட்டறிக்கை தயார்செய்து ஜும்மாக்களில் அறிவித்திருந்தால் போதும். ஒவ்வொரு முஸ்லிமும் இன்னொரு முஸ்லிமுக்குத்தான் வாக்களிப்பான் என்று உறுதி பூண்டால் போதும் 10 பைசா செலவின்றி ஒரு முஸ்லிம் மேயர். இது அரசியலில் பெரும் மாற்றத்தை உண்டு செய்யுமா? இல்லையா? இந்தக் கேள்வியை ஒவ்வொருவரும் கேட்டுப்பாருங்கள்.

சுமார் 20 இலட்சம் இஸ்லாமிய வாக்காளர்களைக் கொண்ட 14 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட சென்னை மாநகரில் இரண்டு இலட்சம் வாக்காளர்கள் பல்வேறு அரசியல் கட்சிகளில் பிரிந்து சிதைந்து சீரழிந்து போனாலும்கூட ஐக்கிய ஜமாத் நிறுத்தும் ஒருவர், மீதியுள்ள 18இலட்சம் வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்ற செய்தியை கேட்ட அரசியல் சட்சிகள் ஒவ்வென்றும் முஸ்லிம்களைத் தாங்க ஆரம்பிக்கும். தலைநகரில் தலையில் தொப்பியோடு தலை நிமிர்ந்து நடக்கும் முஸ்லிமை எவனும் மதிப்பான்!

சென்னை வாசிகளுக்கு, ஏனைய நெல்லை, கோவை, மதுரை, சேலம், திருச்சி போன்ற மாநகர்களில் வென்றிருக்கும் இன்றைய மேயர்கள் ஒன்றரை இலட்சத்துக்கும் குறைவான வாக்குகளிலேயே வென்று உள்ளனர். ஆனால், இஸ்லாமிய வாக்குகள் இரண்டு இலட்சத்துக்கும் மேல் உள்ளன. 6 மேயர்களும் இஸ்லாமியர்களாகவே தேர்ந்தெடுக்கலாம். இது இன்ஷா அல்லாஹ் நிச்சயம், சத்தியம் சாத்தியமானது. ஆறு மேயர்களை நீங்கள் கைபற்றினால் நான் சொல்லும் 64 எம்.எல்.ஏ.க்களையும் ஐந்து எம்.பி.க்களையும் நீங்கள் வெல்லும் காலம் வெகு தூரத்தில் இல்லை!

தமிழக சட்டமன்றத்தில் மூன்றில் ஒரு பங்கு ஆட்சி அதிகாரம் உங்கள் கைகளுக்கு வரும்போது உங்கள் தயவின்றி எந்த மசோதாவும் சட்டமன்றத்தில் நிறைவேற்ற முடியாத அளவுக்கு சக்தி வாய்ந்த ஒரு அமைப்பாக நீங்கள் உருவாகிவிடுவீர்கள். இதையே கர்நாடகமும்,ஆந்திராவும், பீகாரும், மகாராஷ்டிராவும் ஏனைய பிற மாநிலங்களும் பின்பற்றும் போது 540 பாராளுமன்ற தொகுதிகள் கொண்ட இந்திய நாடாளுமன்றத்தில் நீங்கள் இப்போது இருப்பதைப் போல இரு மடங்காக இருப்பது உறுதி செய்யப்படும். நான் சொன்னதை ஒரு முறைக்கு இருமுறை சிந்தித்து பாருங்கள். நான் சொல்வது ஒரே இரவில் சாத்தியப்படும் சாத்தியங்களே. செய்ய வேண்டியதும் முடிவெடுப்பதும் நீங்களே! நீங்கள் நீங்களாகவே ஒன்றுபடுங்கள். வாழ்க்கை உங்களுக்கு வசப்படும். உங்கள் மார்க்க உரிமைகள் பாதுகாக்கப்படும்.

மராட்டிய பால்தாக்கரேவும், பீகாரின் லல்லு பிரசாத் யாதவும், குஜராத்தின் குஜராத்தியரும், உ.பியின் முயலாம் சிங் யாதவும் மற்றும் கன்ஷிராமும், கர்நாடக ராஜ்குமாரும், தமிழகத்தில் ரஜினியைவிட ஜனகட்டில் முஸ்லிம் இனமக்கள் குறைவானவர்கள் இல்லை. யானைக்கு தன்பலம் தெரியாத போது அது அரை அங்குல அங்குசத்துக்கு அடங்கிப் போவது போல, உங்கள் பலம் தெரியாமல் எல்லாவற்றிற்கும் பணிந்க்டு போகிறீர்கள்! என் அன்பின் பினைப்புகளே, ஒரிறை மார்க்கத்தை கை கொண்டு ஒழுகும் முஸ்லிம் மக்களே,என்னுடைய முப்பதாண்டுகள் அரசியல் அனுபவத்திலிருந்து பிழிந்தெடுத்த சாற்றையே உங்களுக்கு தருகிறேன்.

நான் எனது கொள்கையில் உறுதியாய் உள்ளது போல் நீங்களும் உறுதி கொள்ளுங்கள். வருகின்ற தேர்தலுக்கு முன் நாம் இந்த முடிவை சாத்தியப்படுத்தியாக வேண்டும். அதற்கு விரைவான பிரச்சாரத்தில் பட்டிதொட்டி எங்கும் நான் கூறியுள்ள கருத்துக்களை பரப்பிட வேண்டும். பள்ளிவாசல்கள் தோறும் இந்த கருத்துக்கள் அடங்கிய சிறுநூல் பரவிட வேண்டும்.
நாயாக நக்கி நாலுநாள் வாழ்வதைவிட, சிங்கமாய் கர்ஜித்து சில மணித்துளிகள் வாழ்ந்து மடிவது சீரான வாழ்வு, சிறப்பான உயர்வு. இதுநமது மரபு, இது நமது மார்க்கம் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்தாக வேண்டும். இதை உணராமல் ஊர்வலம் போவது, ஆர்ப்பாட்டம் செய்வது, கடைகளை அடைத்து நமக்கு நாமே நஷ்டம் ஏற்படுத்திக் கொள்வது போன்ற தேவையற்ற செயல்களால் வெகுவிரைவில் ஒடுக்கப் படுவோம், அலைக்கழிக்கப்படுவோம்.

…..நாம என்ன பண்ணலாம்……?

Add Comment