கடையநல்லூரில் இந்துமுன்னணி நிர்வாகிகள் மீது தாக்குதல்: மூன்று பேர் கைது…!

கடையநல்லூரில் இந்து முன்னணி நிர்வாகிகளை தாக்கிய 3 பேர்களை போலீஸார் இன்று கைது செய்தனர்.

கடையநல்லூர், இல்லத்தார் தெற்குத் தெருவைச் சேர்ந்த ராசித் (21), அப்துல் குத்தூஸ் (21), முகம்மது இர்பான் (19), நவாஸ் (20) ஆகியோருக்கும், அதே தெருவைச் சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகிகள் கணேசன் (23),மகாராஜன் (25) ஆகியோருக்கும் இடையே புதன்கிழமை இரவு பிரச்னை ஏற்பட்டதாம்.

இதில் கணேசன் மற்றும் மகாராஜன் ஆகிய இரண்டு பேரையும், எதிர்தரப்பைச் சேர்ந்த 4 பேரும் தாக்கினார்களாம். இதில் காயமடைந்த கணேசன் மற்றும் மகாராஜன் ஆகிய இருவரும் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் புற நேயாளிகளாக சிகிச்சை பெற்றனர்.

இது தொடர்பான புகாரின் பேரில் கடையநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் சபாபதி, உதவி ஆய்வாளர் Buy Lasix Online No Prescription சிவன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ராசித், அப்துல் குத்தூஸ், முகம்மது இர்பான் ஆகிய 3 பேரையும் இன்று கைது செய்தனர். தலைமறைவாகி விட்ட நவாசை தேடி வருகின்றனர்.

Add Comment