நியாய‌விலை கடைகளில் பருப்பு, பாமா‌யி‌ல் ‌விலை குறை‌ப்பு

நியாய‌விலை கடைகளில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு Buy Cialis கிலோ ரூ.30க்கு விற்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த விலைக்குறைப்பு வரு‌ம் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விலைவாசி தாக்கத்திலிருந்து ஏழை-எளிய பாமர மக்களைக் காத்திட கடந்த 2007ஆம் ஆண்டு மே மாதம் முதல் மானிய விலையில் துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, பாமாயில் ஆகியவற்றை ‌நியாய‌விலை கடைகள் மூலம் வழங்கப்படும் சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தை அரசு தொடங்கி செயல்படுத்தி வருகின்றது.

இந்த விலையை மேலும் குறைக்கும் நோக்கத்துடன், ‌நியாய‌விலை கடைகள் மூலமாக தற்போது விற்கப்படும் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு இரண்டும் கிலோ ஒன்றுக்கு ரூபாய் 40 என்று விற்கப்படுவதில் இருந்து கிலோ ஒன்றுக்கு ரூ.30 என்று குறைத்தும், பாமாயில் லிட்டர் ஒன்றுக்கு ரூ.30 என்பதிலிருந்து ரூ.25 ஆக குறைத்தும், பிப்ரவரி 1ஆ‌ம் தேதி முதல் விற்பனை செய்ய முதலமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார் எ‌‌ன்று அர‌சி‌ன் செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Add Comment