சிவாஜியை விட அதிக திரையரங்குகளில் ராவணன்!

மணிரத்னத்தின் ராவணன் படம் குறித்த விளம்பர செய்திகள் அணிவகுக்க ஆரம்பித்துள்ளன.

அதில் முதல் செய்தி இது:

ரஜினி நடித்து வசூலில் சாதனைப் படைத்த ஷங்கரின் சிவாஜி படத்தைவிட கூடுதல் திரையரங்குகளில் ராவணன் வெளியாகப் போகிறதாம்.

ராவணன் படம் வரும் ஜூன் 18ம் தேதி உலகெங்கும் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாகிறது.

தமிழில் விக்ரம், பிருதிவிராஜ், பிரபு, கார்த்திக், ஐஸ்வர்யாராய், பிரியாமணி நடித்துள்ளனர். இந்திப் பதிப்பில் அபிஷேக்பச்சன், விக்ரம், ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார்.

சர்வதேச மார்க்கெட்டை பிடிக்க இலங்கையில் நடத்த பட விழாவில் இப்படத்தை திரையிட மணிரத்னம் திட்டமிட்டார். ஆனால், தென் இந்திய திரையுலகினரின் ஒன்றுபட்ட எதிர்ப்பைப் பார்த்து மிரண்டுபோய் அந்த திட்டத்தைக் கைவிட்டார். ஆனாலும் பெரும் விலைக்கு ராவணன் படம் விற்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் ரஜினியின் சிவாஜி படத்தை விட அதிக தியேட்டர்களில் ராவணன் படத்தை திரையிடுகின்றனர்.

அந்த நேரத்தில் வெளியாகும் ஜாக்கிசானின் குழந்தைகள் படமான கராத்தே கிட் மற்றும் டாய் ஸ்டோரி ஆகிய ஹாலிவுட் buy Amoxil online படங்களுடன் இந்தப் படம் மோதுகிறது.

இந்த மூன்று படங்களுக்கும் அதிக தியேட்டர்கள் தேவைப்படுவதால், மற்ற தமிழ்ப் படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாம்.

Add Comment